என நினைத்து பேசத்தொடங்க
நலமா? நீ கேட்கவில்லை
நலம்...நான் சொல்லவில்லை
இடையே ஏற்பட்ட
சில நொடி மௌனத்தை
இருவரும் தாங்காமல்
தவித்த போதுணர்ந்தேன்
பெருகி வரும் அன்பை...-
நிறைந்து வழிவதை முதலில் நம்பு
உனக்காக வாழும் அன்பை மறந்து
எதற்காக தவிக்கிறாய் காதல் துறந்து
இழக்காதே பொழுதுகளை காலம் கடந்து-
என்னிடம் உனக்கு
புரிதல் இல்லாததால்
அருகி வருகிறது
என்மீதான அன்பு💔
அதை புரிந்து கொண்ட
நான்
பெருக வைக்கிறேன்
உன்மீதான அன்பை💕-
அன்று மணிக்கணக்காய் பேசினாய்
இன்று பேசினாால் சண்டை என
மௌன மொழி புரிகிறாய் நீ..
பேசினால் மட்டும் தானா நேசம்
என்று பல கதைகள் சொல்கிறாய்..
எவ்வாறு புரிய வைப்பேன் நான்
தொலை தூரம் இருக்கும் உன்னால்
நான் அடையும் இன்பம் அதுவென்று
முன்பெல்லாம் பெருகிய உன் நேசம்
இப்போது அருகி போய் விட்டது
-
அருவியாய் கொட்டிய
அன்பெலாம்
இப்போது அருகித்தான்
போகிறது
மடை மாற்றம் கண்டிட்டதுவோ
அருவியதன் ஆதியே...-
ஆதங்கங்கப் பட்டேன் அன்பு குறைந்து
வருகிறதென்று, பேத்தியின் முத்தத்தை
பெறும்வரை...-
கோபத்தினால் அருகியது உனதன்பு என்றால்
உன் கனல் கோபம் குளிரும் வரைக் காத்திருப்பேன்...
வெறுப்பினால் வேரோடு வெறுக்கப்படுமாயின்
உயிரோடு மாய்ந்துக் கொள்கிறேன் !-
சுயநலம் பெருகி வரும்
ஆசைகளின் மந்தைகளில்
வாழ்வதால்
அன்பை தேடி திரிகிறாம்
அத்துவானக் காட்டில்..-