அவளை ரசிக்கும்
ஒவ்வொரு முறையும்
வியப்பின் விளிம்பில்
என் விழிகள்
என்ன செய்வது
ஆச்சர்யத்தின் புதையல்
அவள் எனில்-
நேசித்து செய்யும்
தொழிலையும் தொழிலாளர்களையும்
அவ்வளவு எளிதில்
காதல் வாயப்பட
விடுவதில்லை
தொழிலாளியின்
வாயால் இதெல்லாம்
ஒரு வேலையா
என சொல்ல வைத்து
விடுகிறது
முதலாளித்துவத்தின்
சில நிபந்தனைகள்-
பெற்ற பிள்ளைகள்
இருந்தும் படுத்துறங்க
பாய் கூட இல்லை என்று
புலம்பிய பக்கத்து
வீட்டு பாட்டிக்கு
அதிர்ஷ்டம் அடித்து
விட்டது போல
ஒய்யாரமாய்
படுத்துறங்குகிறது
பூந்தோரணம் தொங்கும்
மூங்கில் கட்டிலில்
யார் வாங்கி கொடுத்து
என்று தெரியவில்லை-
கிராமங்களில்
நேரத்திற்கு
பள்ளி செல்ல
சிறார்களுக்கு
பேருந்து இல்லா
நம் நாட்டில் தான்
பண்டிகைகளில் மட்டும்
ஓடுகின்றன
சிறப்பு பேருந்து-
ஒருவருடன்
உங்களால்
ஒத்துப்போக
முடியவில்லை
என்றால் சற்று
ஒதுங்கியே இருங்கள்
அவர்களிடம் விவாதமும்
செய்யாதீர்
அவர்களை பற்றி
விமர்சனமும் செய்யாதீர்-
யாரையும் ஆடம்பரம்
என வசைபாடதீர்
நம் வீட்டு பரனை
ஒரு முறை சுத்தம்
செய்தல் தெரியும்
நாம் எவ்வளவு
ஆடம்பரம் என்று-
திருவிழா கூட்டத்தில்
பல குழந்தைகள்
அடம் பிடிக்கின்றன
எதையாவது
வாங்கி கொடுங்கள்
என்று
சில குழந்தைகள்
அடம் பிடிக்கின்றன
எதையாவது
வாங்கி கொள்ளுங்கள்
என்று-
காற்றடித்து
இலை இழந்த
மரங்களுக்கு
காற்றையே
தாங்கி நிற்கும்
இலைகளாய்
பாலுன்கள்
-
இரவை
போர்த்திக்கொண்ட
பிறகும்
உளறிக்கொண்டே
இருக்கிறது
விழிகள்
கனவில்
அவன்-
நம் வாழ்வில்
சில மனிதர்கள்
அவர்கள் தேவை
தீரும் மட்டுமே
நம்மிடம்
இருந்து விட்டு
பறந்து விடுவார்கள் வேடந்தாங்கல்
பறவைகளை போல்
-