எதற்குமே லாயக்கற்றது என
ஏதாவது இருக்குமாவென
யோசித்து கொண்டே இருந்தால்
அந்த லாயக்கறதாய்
நாமே ஆகி விடுகிறோம்
வெளிப்படையாக பேசுகிறேனென
சொற்களை வைத்து
முற்றம் தெளித்து கொண்டேயிருந்தால்
போவோர் வருவோரெலாம்
புள்ளி வைத்து கோலம் போட்டிடுவர்
-
Rajalakshmi Punnaivanam
637 Followers · 93 Following
Joined 27 June 2018
3 MAY AT 22:55
19 APR AT 18:59
அனர்த்தமாய் ஒரு காலம்
அதில் படு திராபையாய்
அத்தனை நிகழ்வுகள்
மறக்க வேண்டிய ஏதும்
மறக்கவில்லை
நினைவு படுத்தி கொள்ள
சுகமாய் ஏதுமில்லை...-
9 APR AT 9:13
எதிர் பார்ப்பதெல்லாம்
நடக்க வேண்டுமென்பதை விட
எதிர் பாராத எதுவும்
நடந்துவிடக் கூடாது என்பதே
நாளின் தொடக்கம்...-
8 APR AT 17:10
கீழே விழுவதற்குள்
ஒரு பறவையின்
வாழ்க்கையை
வாழ்ந்து பார்த்து விடுகிறது...-
1 APR AT 17:09
என்னைப் பற்றி
இருக்க வேண்டும்
என்பது உனக்குமெனக்குமான போட்டி
யார் தோற்றாலும்
வெற்றி இருவருக்கும்தான்...-
31 MAR AT 22:28
'என் நீ' யாய் வைத்திருந்த நாட்கள்
என் நான் தொலைந்து போனேன்
மீட்டெடுத்த 'என்நான்'
மீண்டும் மாண்டு போக போவதில்லை...-
31 MAR AT 22:09
துணிந்து சொல்லிய பொய்கள்
எப்போதும் குட்டி போட்டு கொண்டே இருக்கும்
என்றேனும் ஒருநாள் அதன்
நதிமூலம் மறந்து
எட்டாத ஆழத்தில்
மெய் சமுத்திரத்தின்
ஆதி துளியாய் ஆகியிருக்கும்...-