மூடி வைத்தப் பேனா
முதல் முறை என்னைக் கூப்பிட்டது
அவள் திரும்பிப் பார்த்தாள்
முழுக் கவிதை எழுத
இது போதுமாம்
முனைப்புடன் விரல்கள்
தாளைத் தழுவ
வரிகள் உருகியது
காதல் மைப்பூசி-
மயக்கம் தெளியும் நேரம்
நிதர்சனம் புலப்படும்
நிலைத்த ஒன்றைக் காண
நிலைக்காதவற்றை துறப்பதே
அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம்-
உங்கள் மனதுடன் உறவாட தெரிந்து விட்டால் மறைந்திடும் நிழல் போன்றது
உங்களை விட அழகான ஒன்று உங்களுக்குள் இருப்பதை உணர இந்த தனிமை ஒரு சொர்க்கப் பயணம்-
மனம் எதையெல்லாம்
தூக்கி சுமக்கின்றதோ
அதெல்லாம் ஒரு நாள்
தேவையற்றதாகி விடுகிறது
நிலைக்காத உணர்வுகளுக்கு
எதை நிரூபிக்க போராடுகிறது இந்த மனம்
சுமப்பதை நிறுத்தினால்
நிலைத்த சுகம் எதுவென
வாழ்க்கை உணர்த்தும்..-
பெரிதாக்க விரும்புவதில்லை
நேசம் கொட்டும் மனது
அதன் எல்லைத் தாண்டும் போது
நிதானம் செயலிழக்கும்.-
கனவுகள்
வெளுத்துப் போனது
இனி சாயம் பூச
உணர்வுகளின் தூரிகை
உயிர்ப்புடனில்லை-
Trust the feeling that feels right,
Like calm inside and shining light.
The people with the right vibe for you,
Will always be close and true.-
மயக்கங்கள்
தெளிவதேயில்லை
அதன் உலகத்தில்
நிறைந்த வலிகளும்
சின்னதாய்
குதூகலமும் உள்ளன
அந்த வலிகளின் சத்தம்
எழ விடவில்லை
மயக்கம் ஓர் புதிர்.-
Grateful to those
who rejected me
for the pain
that shaped me,
and the lessons
that saved me.-