....
-
காதல் கொண்ட
சகி
இவள்
கவிநேசகி
சொல்லொன்று (க)விதையான சொப்பனமாம்...
மன வில் கொண்டு அதையாள அர்ப்பணமாம்....
நேசமலரென்னும் அம்பெய்த அயர்ந்திடுமாம்...
ஆசைதரமென்றும் அன்பிற்குள் அடைக்கலமாம்...
நதியொன்று வரையறிந்து நிறைகிறதாம்...
மதியென்றும் உயர்வறிந்து விரைகிறதாம்...
விழியிரண்டில் துயரறுந்து கரைகிறதாம்....
மொழி விருந்தில் உயிருறைந்து விளைகிறதாம்...
உன் எழில் சுமந்த வதனத்தில்
உளம் தொலைத்தேன்
என் பொழில் சொரிந்த அதரத்தில்
நினை நிலைத்தேன்...!!!
தண் மதில் சரிந்த இதயத்தில் உனை நினைத்தேன் ...!!!!-
வாழ்ந்தே ஆக வேண்டும்
என்ற கட்டாயத்தில் சிலர்
வழிகள் பல இருந்தாலும்
மரணிக்க முடியாது
வலிகள் பல குடைந்தாலும்
ஜனித்திருக்க இயலாது
வாழவும் சாகவும் வரமின்றி
துடித்திருப்பது நரகத்தின் உச்சம்
இனி சொல்ல என்ன மிச்சம்
-
அமைதி உடையும் போது
அனைத்திலும் நிலை தவறும்
விழித்திரை தடம் கிழிந்து
விழிகள் உடன் கரையும்
இருதயம் அதில் சிதைந்து
இதயம் நிதம் உறையும்
நின்மதி பிடி தளர்ந்து
நிம்மதி அடி குறையும்
ஊனுயிர் பாரமென புரியும்
இன்னுயிர் பாரினை பிரியும்-
துணைவனின் காதல்
கிடைத்துவிட்டாலே போதும்
வேறெதுவும் தேவையில்லை
வாழும் நாட்கள் தோறும்
கேட்கின்ற வரங்களே
கிட்டாதபோது
கேட்காத வரமென்றும்
பழம் புளித்த ஏடு-
நிலவழகு நினைவழகென்று
கற்பனையில் நேசக்கவி
கதைக்கும் இவள்
நிஜத்தில் தூளிக்கட்டி ஆடிக்
கொண்டிருப்பதென்னவோ
பாசப்பசுமையில்லா
பட்டமரத்தில் தான்...
என்றாவதொரு நாள்
பூத்துக் குலுங்குமென்ற
பகல் கனவில்......-
சேர்த்து வைத்த
ஆசைகளெல்லாம்
கனவாகிப் போகிட,
கோர்த்து பதித்த
நினைவுகளால் தான்
உயிரோடு உலவுகிறேன்...!!
விழிப்பூக்கள் ஏந்திய
உணர்வுகளி ளெல்லாம்
விதியில் கரைந்து
கலைந்த கனவுகளும்
மனதில் உறைந்து
தொலையா நினைவுகளுமே
ஊசலாடுகின்றது...!!!
-
புரிதல் இல்லாத இடத்தில்
பகிரப்படும் வா(ழ்க்கை)ர்த்தை
விழலுக்கு இறைத்த நீர்..!!!
-
அழுது தவிக்கும் நேரங்களில்
எழுதத் துடிக்கும் விரல்கள்...
உழுது எடுக்கும் எழுத்துகளில்
பழுது நீக்கும் உரங்கள்...!!-