17.09.2025 (புதன்)
நேர்மை, உண்மை,
உறுதியை பெற்றவர்கள்
ஆராய்ந்து பார்க்காமல்
தீர்வு சொல்ல மாட்டார்கள்...
(திருக்குறள் 👇)-
கவிதைகள்... #கவி_அருவி
நீள் கவிதைகள்... #குமுதமீரா
புத்தகம் பகிர்வு #m... read more
இந்த பிரபஞ்சத்தின்
சிறு துகள் 'நான்'
'நான்' என்ற எண்ணத்தை
கைவிட்டதும்
பிரபஞ்சமானேன்...-
எதிர்பார்ப்புகள்
கூடாதென்று
நம்மிடம்
சொல்பவர் தான்
பாவம்
பிறரிடம்
கேட்டுக் கேட்டு
ஏமாற்றத்தை
பெறுகிறார்...-
16.09.2025 (செவ்வாய்)
உள்ளத்தில்
உறுதியாக வீற்றிருக்கும்
நீதியும் நேர்மையும்
ஒருவர் சொல்லிலும்
பிரதிபலிக்கும்...
(திருக்குறள் 👇)-
15.09.2025 (திங்கள்)
இவர் தனக்கானவர்
என்றோ
இவர் தன் பகைவர்
என்றோ
நினைக்காமல்
சமநிலை கொண்டு
பின் ஆராய்ந்து
தீர்ப்பளிக்க வேண்டும்...
(திருக்குறள் 👇)-
நல்ல எழுத்தாளர்
அனுபவ முதிர்ச்சி
கவிதையில் தெரியும்
நட்பின் சிறப்பு
பின்னூட்டம் சொல்லும்
நகைச்சுவை பதிவில்
குழந்தைத்தனம் தெரியும்
மென்மேலும் க'விதை'கள்
மலர அன்பான வாழ்த்துக்கள் 💐-
14.09.2025 (ஞாயிறு)
அறவாழ்வில்
கிடைப்பது வறுமையே
என்றாலும்
சான்றோர் அதை
வறுமையாக
காண்பதில்லை...
(திருக்குறள் 👇)-
13.09.2025 (சனி)
செய்ய இருக்கும்
தவறால்
தன் வாழ்க்கை
தவறிப் போகும்
என்பதை உணர்வது
மிகவும் அவசியமாகும்...
(திருக்குறள் 👇)-