என் சிரிப்பின் வலி..,
கோவத்தின் இயலாமை..,
மௌனத்தின் சத்தம்..,
கண்ணீரின் காதல்..,
என் வாழ்வின் அர்த்தம்!-
காதலின் முள்வேலி
உன் நினைவோடு பயணிக்கும் பயணத்தில்
பனிநிறைந்த கண்ணாடியில்
கண் வரைந்தேன்....
அதிலும் வழிகிறது
கண்ணீர்!-
சிறகாக நீ வேண்டும்,
சிறக்கடித்து நான் பறக்க..,
வானாய் நீ வேண்டும்,
எட்டாத உயர் நான் தொட...
காற்றாக நீ வேண்டும்,
கையில் பிடித்து நான் விளையாட...
மொத்தத்தில் நீ வேண்டும்
நானாக நான் வாழ ❤️-
போங்க எனத் தொடங்கி
போ எனப் பழகிப்
போப்பா என நெருங்கி
போடா என் முழுமைப் பெற்று
போறேன் என நிறைவுப் பெற்றது
நம் காதல்!-
அவன்
என் அழுகையின் முதல் துளி,
உதட்டோரப் புன்னகை,
குளிரில் வெப்பம்,
இருளில் வழிகாட்டும் ஒளி,
மௌனத்தின் மொழிபெயர்ப்பு,
வெட்கத்தின் வெளிப்பாடு.,
யாரிடமும் சொல்ல முடியா
ரகசியம். ...என்னவன்!-
என்னிடன் எண்ணிட ஏதுமில்லை....
கலங்கினால் கண்ணீரில் கரைந்துவிடுமோ..,
மறைந்தால் என்னுடனே மறைந்துவிடுமோ..,
என,
நினைவுகளை தாங்கி எண்ணத்தில் வாழ்ந்துவருகிறேன்.,
நீ இனியொருமுறை வருவாயென எண்ணி!
-
நிலவின் புன்னகை
கதிரவன் எட்டயிருக்கும் போதே....
அவனோ பக்கம் வர
இவளோ பூமிக்கு பின்னால்
நாணத்தில் மறைக்கிறாள்!
அவளும் பெண் தானே ☺️-
இழந்தது தர கடவுள் அருள்புரியுமெனில்
நான் முதலும் கடைசியுமாய் கேட்பது
என் அப்பா!
உன்னை எண்ணும்போதெல்லாம்
முந்திக்கொண்டு முதலிடம் பிடிக்கிறது
என் கண்ணீர்....
எல்லாம் கற்றுக்கொடுத்த நீ
நீயில்லாமல் வாழக் கற்றுக்கொடுக்காமல் போனேதேனோ!
நீ இருந்தவரை இழந்ததேதும் பெரிதாய் இல்லை. ..
இன்று இனி இழக்க என்னிடம் வேறெதுமில்லை!-