நாலடியில் கிறுக்கிடுவார் ...
நயமாய் அவற்றை பதிவிடுவார்...
நற்கவியென்று கூறிடுவார் ..
தற்புகழ்ச்சியில் ஞானம் மறப்பார்...
தாமாய் கவிஞர் என்றிடுவார்...
குறை குடமாய் இருக்கும் - சில
கிறுக்கர்கள்....
-
நீங்கள்
கூறும்
ஆறுதல்கள்
கூட
கவிஞனாய்
ஒருவரை
மாற்றவல்லது...!
என்பதை
நீங்கள்
அறிவீர்களா...?
சிந்தித்து
செயலாற்றுங்கள்...!
-
காதலிப்பவர்கள் எல்லாம்
கவிதையை எழுத மாட்டார்கள்,
மாறாக கவிதையை எழுதுவர்கள்
என்றுமே காதலிப்பவர்களும் தானே
ஏனென்றால் கவிதையாய்
காதல் போன்று நேசிப்பவர்கள்
தானே நிதமும் கவிதை மழையில்
மழலையை போல திளைக்கிறார்கள்.
கவிஞன் காற்றில் எழுதிடுவான்
காகிதத்திலும் தூவி விடுகிறானே
வளியுடன் வலியுமாய் அது க-விதை-
நான் தான் ✍️👍💐
நம்மை நாமே
நேசிக்கவில்லையென்றால்
பிறர் நம்மை நேசிப்பதை
எப்படி உணர முடியும்?!-
பூவையும் நாரையும்
தொடுத்து
பூமாலையாக்கியது போல்
கவிஞனின்
கடந்தகால நிகழ்வுகள் சில
கற்பனைகள் பல
இரண்டையும் தொடுத்து
எழுத்துகளை வார்த்தைகளாக்கி
வார்த்தைகளை வரிகளாக்கி
வரிகளை கவிதையாக்கி
தம் கற்பனையை வழங்கும்
கவிஞனின் வரிகள் சில
வாசிக்கும் போது வலி கொடுக்கும்
கவிஞனின் வரிகள் பல
வாழ்க்கைக்கு வழி கொடுக்கும்..!
பூவோடு நாறும் மணந்தது போல
கவியோடு கற்பனையும் இனித்தது...!
-