Nathi Nile   (©Uyirttezhu)
1.2k Followers · 308 Following

read more
Joined 28 July 2018


read more
Joined 28 July 2018
14 APR AT 11:05

கொடி போல் செடியின்மீது
படர்ந்திருக்கும் சிலரை
நம் வாழ்விலிருந்து அகற்றாவிடின்
வேரோடு சாய்க்கப்படுவாய்...

-


12 APR AT 10:32

ஆசையாக அழுது அடம்பிடித்து
வாங்கிய ஒரு பொருளை
அசால்ட்டாக உடைத்து எறிகிறது
அந்த குழந்தை - சில
மனிதர்களின் கைகளில் கிடைக்கும் அன்பை போல...

-


12 APR AT 8:52

வேண்டாம் என்று முடிவெடுத்தபின்
எக்காரணத்தைக் கொண்டும் அவற்றிடம்
திரும்பிச் செல்லக்கூடாது...

-


12 APR AT 8:38

காற்றோடு கலந்து கதை பேசிட
காத்துகிடக்கிறதோ இந்த காய்ந்த இலை,
அந்த காதலர்களைப் போல...

-


9 APR AT 10:43

ஆறடி உயரம்
அளவான தாடி
அன்பான மனம்
அப்பப்பா அவனின்
அழகை அறிய,
அவனைக் கண்ட
அந்த நொடியில்
அதிவேகமாக துடிக்கும்
அவளின் இதயத்திடம்
அவனைப் பற்றிக்கேள்!
அதுவாயிரம் கவிபாடும்...

-


2 APR AT 8:44

நீ தேநீர் அருந்தும்
அழகைக் காணவே
மொத்த தேயிலைத்
தோட்டத்தையும்
பரிசளிப்பேன் நான்..

-


30 MAR AT 20:42

கிடைக்கும் வரை தான்
அவைகள் நமக்கு அதிசயம்,
கிடைத்தபின்பு அவைகளின் மேல்
ஏன் இந்த அலட்சியம்?..

-


18 MAR AT 22:08

என்ன ஆயிற்று இவ்விரவிற்கு
எதையேனும் அசைபோட்டுக் கொண்டே
என்னை வதைகிறது...

-


14 MAR AT 8:43

கடந்து சென்றபின்
திரும்பி செல்லக்கூடாது
சில உறவுகளிடம்...

-


17 FEB AT 7:30

-


Fetching Nathi Nile Quotes