இன்னும்
மீதமிருக்கிறது
ஒரு கனா
ஒரு ஆசை
ஒரேயொரு
பக்கம்!-
______________________________________________
The world's greatest
wor... read more
நித்தம் என்னுள்
நீங்கா வதனம் என
நின்னைக் கண்டேன்
நின்று கொண்டேன்,
நூலிடைவெளியில்
நுணுக்கமான உன்
நினைவுகள் மட்டும் ஏனோ
நிரப்பி ஈர்க்கிறது
நீளாததென் பக்கங்களை!-
அதைக் கலைந்திடும்
சலனங்கள் நானாக..,
மேகம் நீீயாக
அதில் ஊற்றி வைத்த
தூறல்கள் நானாக..,
வானவில் நீயாக
அதில் ஒட்டிக் கொண்ட
வண்ணங்கள் நானாக..,
இதம் பதமாக
மண் போர்த்தியே
புணர்ந்தது மழையாக..!-
மொழிபெயர்த்துக்
கொள்ளும் போது மட்டும்
அப்பெரும் துயருக்கு
கண்ணீர் என்ற பெயர்!-
அனைத்தையும் உதறிவிட்டு
அற்பமான இவ்வாழ்வை எண்ணி
அதட்டிக் கொள்ளாமல் இருப்பதுவே
ஆறுதல் எனக்கொள்கிறது மனம்!-
உன் இலக்கை தொடுவதில்
இல்லை வெற்றி,
எப்போது நீ அந்த இலக்கை
தாண்டி முன்னேறிச் செல்கிறாயோ
அதுவே உண்மையான வெற்றி!-
பரீட்சைகளில் வென்றதுண்டு
பரீட்சைகளில் தோற்றதுண்டு
இருந்தும் - கற்றுக் கொள்ள
மறந்ததில்லை!-
அவர்களுக்குப் பிடித்தே பழகிவிட்டது
அவைகளுக்குப் பிழைத்தே பழகிவிட்டது!-
இங்கு சாதாரணம் என்னவெனில்
இயலாமையில் இன்பம்கண்டு
இளைப்பாறிக் கொள்ளும் ஓர் அற்பமான
இதயம் கொள்வது மட்டுமே!-