கவிமலர் ராஜூ   (கவிமலர் ராஜூ)
3.8k Followers · 146 Following

read more
Joined 3 November 2019


read more
Joined 3 November 2019

எப்போதும் போல கடக்கும் தினங்களுக்கு
பெயரிலில்லாமல் இருந்தால்
ஏமாற்றம் என்று ஒன்று இல்லாதிருக்கும்

-



எப்போதும் போல
முரணாக
அகமும் புறமும்

-



எப்போதும் போல
இப்போதும்
ஆசைகளையும்
ஏக்கங்களையும்
சகித்து கடக்கும் மனம்

-



எப்போதும் போல

நீ முன்பே வந்து விட

இப்போதும் அதே மாதிரி

இன்னும் தாமதித்துக் கொண்டிருக்கிறேன்

என்ன ஏனென்று கேட்காமல்

புன்னகைக்கும் அதிசயத்தை

வியந்து பார்க்கிறேன்

-



எப்போதும் போல வந்து விடும் கனவுக்கு
இன்று என்ன விடுமுறையோ

-



தன்னுடைய நேரத்தை
தன் தனிமைக்கு கொடுக்க
அழகழகான காட்சிகளை
தனக்குள் பத்திரப்படுத்திய
விழிகளும் நினைவுகளும்

-



அழகியின் முன்
ஆர்வமாக தேடல்

அன்பின் பின்
அகலாத ஊடல்

-



பூவை பற்றிய எழுதிய கவிதையை

முதலாவதாக வந்து வாசிக்கும்

வண்ணத்துப்பூச்சி

-



மனதின் குரலாக இருப்பது
தனிமையான நிழல்கள்

-



நீள் பயணத்துக்கு

அதீத காதலும்

அழகிய நினைவும்

நிறைவாக இருக்க வேண்டும்

-


Fetching கவிமலர் ராஜூ Quotes