என்னுடன் பிறவா உடன் பிறப்பே
எனக்கு தங்கை இல்லை என்ற
உணர்வை அறுத்தெறியவே
ஆண்டவனும் அறிமுகம்
செய்த அரிய உறவே
ஆறுதல் சொல்வதில்
என் அன்னைக்கு இவள்
என்றும் நிகரே,உன்னோடு
ஆன நாட்களை கொண்டாடி
தீர்க்கும் எனக்கும் உன் பிறந்த
தினத்தை கொண்டாடிடவே ஒரு
நாள் மட்டும் தான் போதுமா என்ன
அகவை 25-ன் இனிய ஆரம்பம் 💕-
💞 அன்பே அருணாச்சலம் 💕
🤗 தங்கத்தாய் அவளின் தலைமகன்.
👌 தாய்... read more
மாற்றம் எதுவும் பிறந்திடாது
வாழ்வின் எத்தகைய சூழ்நிலை
ஆயினும் தடுமாற்றம் இருக்கலாம்,
தடம் மாற்றம் தான் என்றும் கூடாது
எவ்வாறாயினும் நீ நீயாக இரு
-
முடிவுகளை எடுக்கும் இடத்திலோ,
அவைகள் எடுபடும் இடத்திலோ
யானும் இல்லை என அறிந்தப்
போதுமே முடிவிலி தானே
எந்தம் காதலும் கூட
நம் கானல் நீர் காதலும்
கலங்கரை விளக்கம்
ஆனதும் ? ஏனோ
-
⚜
☯️
நான்
ஏ-தோ
போலவே
தான் அன்று
இருந்தேன் கை
காலும் முளைத்த
கவிதை தனக்கான
கவிதை ஒன்றையும்
தன் கால்களுமே இட்ட
முத்தம் தானென வினவ
நாண வில் உறுதி மொழி
ஒன்றினை ⭕️ மெய்யுரைக்க
அது எல்லாம் ஒன்றுமில்லை
ஒன்றும் இல்லையென பொய்
உரைத்தது,ஆனாலும் அவளின்
கம்மலும் கொஞ்சம் சிணுங்கிட
சொனங்கி போனேன் அடியே
ரகசியம் சொன்ன காதணி
இடம் காதல் கொண்டேன்
அவள் கம்மல் மீது யான்
கொண்ட காதல் அவள்
மீது முதன் முதலாக
ஊடல் கொண்டது
இம்முறை சற்று வலு
கொண்ட ஆட்டத்துடன்
கொஞ்சம் சுற்ற விடுவோம்
பட்டு குட்டி என ஆசுவாசமும்
படுத்தி அச்சாரமுமே இட்டாள்
அடங்கா ஆனந்த தாண்டவத்தின்
ஆர்பரிப்பு எனை பறிக் கொண்டது
சிணுங்கும் கம்மல் தன் ஆட்டத்தால்-
தாய் - மாமன் - மரு - மகன்
பந்தம் தொடக்கமான நாளின்
காலச்சக்கரம் ஓடிடும் நான்காம்
வருடம்,நிலனுக்கு அகவை நான்கு
அழகியல் வாழ்த்து பூ மடல் 🍁
↘️⬇️↙️
⏩️🕉️⏪️
↘️↙️
⬇️
வடிவமானவனுக்கு
வடிவ(மதி)லும் வாழ்த்து-
வீண் மீன்களின் கூட்டத்தில்
துள்ளியோடும் மான் போன்று
கண்கள்,கருமேகத்தில் வெள்ளி
நீர் வீழ்ச்சியினை போல கூந்தல்
நியூட்டன் மூளை குழம்பி போகும்
ஆப்பிள் கனி கன்னங்கள்,தனுசு
தாங்கிய நெற்றியினில் பரசுராம
வில்லேந்திய கருமை புருவங்கள்
நெற்றிக் கண்ணாம் சிவன் குடில்
கொண்ட இமயமலை பனியாறாம்
அவள் அழகியல் நுகர் நாசித்துளை
குறும் சிரிப்பினில் குழந்தை தாடை
அவள் அழகிற்கென்று அதி சிறப்பு
அகராதி-யினை கவிஞன் வடிக்கும்
மென் நுட்ப வேலை பாடு அடங்கிய
ரதியின்சிலை தானே அவளும் கூட-
திருக்குறள் : 1108 அதிகாரம் : 111
வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.-
ஒருவரின் தோல்வியில்
தான் உன் வெற்றி என
ஒரு போதும் மறவாதே
இந்தப் போதைகளில்
புகழ் எனும் போதை மட்டும்
பொல்லாத ஒன்றாக ஒன்றும்
பாதை மாறா பயணம் பயனறும்
-
எந்தப் பெண்ணை யான்
காணும் போதும் அவளை
தேடுகிறேன் அவள் யாரோ
எனவும் அறிந்தும் திருவிழா
கூட்டத்தினில் தொலைந்த ஓர்
குழந்தை போல ஏனோ எந்தன்
மனம் தேடித் தேடி தேம்பிகிறது-