இந்த அநாவசியமான நீளம் எதற்கு
இழுத்து மடிக்க வேண்டுமா
பிரபஞ்சம் நமக்கு!
எதிர் வீடு தான்
இடைஞ்சல் என்றால்
தகர்த்து விடலாம்..
ஆனால், அது மட்டுந்தான் காரணமா!
சொல்கிறேன் சொல்கிறேன்
என்னும் சொல்லை மட்டுமே பரிசளித்தாய்
சுற்றிலும் உன் பிம்பங்களால்
என்னை அலைக்கழித்தாய்
உனதருகாமையில் திளைக்க
இன்னும் எத்தனை தணலில்
எரிய வேண்டும் நான்?
சீக்கிரமாய் உன் அணைப்பில்
மீட்டுக்கொள் என்னை..
பிழைக்க விரும்புகிறேன்
பார்த்துக் கொண்டே உன் கண்ணை..-
🎓Ex Heberian 🎓
@kumbakonam🏯
✒️Fav lyricist Na.Muthukumar✒️
🥺Missing him e... read more
இது போதும் என்ற
மனநிலைக்கு மேல்
என்ன இருந்திட போகிறது..
இது போதும்..இதுவே போதும்
என்றளவுக்கு
எல்லாம் இருந்தது எனக்கு..-
பிரயாசப்பட்டு அமர்த்திய நினைவுகள்
திடீரென வீறிட்டு அழுவதை
எத்துயரினால் துடைப்பேன்..-
நீ இருந்தாய் என்பதை
நினைத்தே இருந்துவிடுகிறேன்
உன் நினைவில் நனைந்திருந்த
ஈரம் போதுமென
உறைந்துவிடுகிறேன்
எதோ ஒரு பொய் காரணம் கூறி
என்னை நான் விலக்கிவிடுகிறேன்
தவறுதலாய் தொலைக்கப்பட்ட வைரமென மண்ணுக்கடியிலேயே மங்கிவிடுகிறேன்..
நீ வரவேண்டாம்
இன்னொருமுறை நீ போவதை
இனியும் ஏற்க
போவதில்லை நான்..
-
வாசல் தெளித்த வண்ணங்களாய்
நேற்றுதிர்ந்த இலைகள்
நாளுக்கு ஒரு கோலத்தை
கலைத்து போடுகின்றன
யாருமற்ற வீடுகள் அப்படியே
இருந்துவிடுவதில்லை..-
எப்போதோ எழுதி பாதியில்
விடப்பட்ட எழுத்துக்களை
திருத்தி திணறி
மூச்சிழுத்து பிழைக்கச்செய்யும்
தருணங்களில்
பெருமூச்சியுடன்
அமர்கிறது ஒரு நிழல்
ஒரு நினைவினை
அமர்த்தியபடி..
-
ஒரு கீற்று வெளிச்சத்திற்காய்
எவ்வளவு இருண்டு
கிடந்திருக்கிறேன்..
எதன் எதன்
நிழலிலோ மறைந்துபோன
ஒரு சுருள் இருளுக்குள்
சுழல்கிறது வெளிச்சம்..
மனதின் கருந்துளைகளை
எப்படி கீறியதிந்த ஒளி..
~shino dolly
-
அதீத அன்பின்
அஸ்திவாரம் நீ..
ஆனந்த வெள்ளத்தின்
வெளிப்பாடு நீ..
இறுகப்பற்ற நினைக்கும்
இருப்பிடம் நீ..
ஈரம் குலைந்த பார்வையில்
பச்சிளம் நீ..
உன் நேசத்தில்
நிறைந்திருப்பதும்
உன் சுவாசத்தில்
உறைந்திருப்பதுமான
ஆகச்சிறந்த போதையின்
சொந்தக்காரன் நான்..
-
சலித்துவிட்டது போன்ற
இவ்வாழ்வை
எவ்வாறு சலிப்பது
முகம்மிளிரசெய்தவற்றை
நடுவில் நிறுத்தி
மூச்சிழுத்துக்கொள்வதிலா..
ஆகச்சிறந்த நம் கவிதையொன்றை
மீண்டும் படித்து
மெச்சிக்கொள்வதிலா..
தூரங்களில் பயணப்பட்டு
ஆசுவாச காற்றை இழுத்து
ஆற்றிக்கொள்வதிலா..
மனமுவந்த இசையை
செவிசொடுக்க கேட்டு
லயித்துக்கொள்வதிலா..
எவ்வளவு இருந்தும்
விட்டு சென்ற ஒருவருக்காய்
மன இடுக்குகள் புறள்கின்றன
முடிவுகள் இரக்கமற்றதென
முன்னுரையில் நாம் அறிவதில்லை-
இந்த பிரிவிக்கு தான்
என்னை பழக்கினாயா!
நான் பழகவில்லை
என்பதனாலே விலகினாயா!
எதற்காவது என்னை நினைப்பாயா!
எதற்கும் தேவையில்லை
என்றதாகவே நினைத்தாயா!
எந்த கேள்வியும் நான் கேட்கபோவதில்லை
கேட்டால் போதிய காரணங்களோடு
வெறுத்து விடுவாய்
இருக்கட்டும் என்னை நீ
ஒதுக்கிவிட்டதாகவே இருக்கட்டும்
ஏதோ ஒரு தூரத்தில் எதற்குமில்லாது
இருந்துவிட்டு போகிறேன்..
யாருமற்ற அருகாமையில் நீளட்டும்
என்னுடனான உரையாடல்..
ஏதுமற்ற நிற்கதியில் தொடரட்டும்
என்னுடையதான நிழல்
-