நான் ஓரமாய் நின்று
உங்களை வேடிக்கை பார்ப்பேன்
நீங்கள் எப்போதும்
என்னை கவனிப்பதே இல்லை
-அனு பாரதி
(👇👇👇)
-
I love writings.
But I lo... read more
இந்த காதல்
எப்படி கைகூடும்
எந்த நம்பிக்கையில்
நீ இந்த காதலை
இத்தனை இறுக்கமாய்
பற்றிக்கொள்கிறாய்
என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே
போகிறாய் ...!!
(👇👇👇)
-அனு பாரதி
11july5.45pm
-
எப்படியாவது
கேட்டுவிடுகிறீர்கள்
யாராவது கேட்டுவிடுகிறீர்கள்..
இதெல்லாம் எதற்கு
செய்கிறாய்
மீண்டும் மீண்டும்
இப்படியே கேட்கிறீர்கள்.??
நான் எதையோ
எதற்காகவோ
செய்து கொண்டிருக்கிறேன்..
ஒரே கேள்வியை
அழுத்தும் உங்களிடம்
எப்படியாவது சொல்லிவிடவேண்டும்
அந்த பதிலை..
நீங்கள் கேட்க விரும்புவது பதில்
நான் தேடுவதோ விடை...
விடை தெரிய
காத்திருக்க வேண்டும்
நானும்
நீங்களும்..!!
-அனு பாரதி-
அவிழ்க்கப்படா
சுமை மூட்டைகளை
யாருக்கும்
வெளிகாட்டாமல்
தன்னுள்ளே அடைத்து
வைத்திருக்கும்
மனக்கிடங்கு
தந்தையின் இதயம்.
-AnuBharathi
-
அவன் அழைக்கின்ற வேளையில்
அணைத்திட மறுக்கின்றன கைகள்....!
அதிகாலை அலாரம்.-
நாம் விரும்பி ஏற்றுக்கொண்டதை விட
பிறர் விருப்பத்தின்பேரில்
திணிக்கப்பட்டவைதான்
அதிகம் ஆக்கிரமிப்பு செய்கிறது.
அலமாரியில் ஆடைமுதல்
ஆழ்மனதில் அன்புவரை
எல்லாம் திணிக்கப்பட்டவைதான்.
விருப்பட்டவைகள் எல்லாம்
ஓரிரு இடுக்களில்
நம்விருப்பத்ததைசேமித்து
வைத்திருக்கும் பொக்கிஷமாய்.
-
இனி வரம் தந்திடும் கடவுள்
வேண்டாம்.
வரமாக கிடைத்திட்ட
இவள் நட்பு போதும்...
நான் நானாக
நாம் நாமாக இருந்திடும்
அரைநொடி பொழுதுகள்
அடுத்த சந்திப்புவரை
தித்திப்பாய் திகட்டாமல்
என்றும் பசுமையாய் நம்
மனதில்...
-
மலைக்குன்றுகளுக்கும் புல்வெளிகளுக்கும்
மட்டுமே தெரியும்
தன்மீது உறங்கும் பனித்துளி
தந்திடும் வெப்பம் எத்தனை சுகம் என்று........
-
குறை சொல்பவர்கள் நம் வாழ்வை உயர்த்தி கொள்ள உதவும் தூண்டுகோல்கள்.
-