ஒவ்வொரு அக்கறையான
வார்த்தைக்கு பின்னும்
ஒரு நயவஞ்சகமோ
ஒரு சுயநலமோ
ஒரு சூழ்ச்சியோ
ஒளிந்திருக்குமென்ற அச்சம்
என்ன செய்ய...??
வாழ்வின் அனுபவங்கள் அப்படி
சிரித்துக் கொண்டே நஞ்சை ஊட்டினாலும்
கசக்கத்தான் செய்கிறது...!!!
எந்த அக்கறையும்
ஏற்றுக் கொள்ளா மனம்
இக்கரையிலே தள்ளி நிற்கிறது
அக்கறை என்ற அக்கரை வேண்டாமே....!!!
31.03.2025 இரவு 11.40-
இக்கேள்விக்கு 🤔
விடைதெரியாமல் தான்🤩
பக்கங்கள் பல படைக்கிறேன்...!
இற... read more
மனிதர்களை
நாய் என்றோ
மிருகம் என்றோ
அழைக்காதீர்கள்
அப்படி அழைத்தால்
அதன் புனிதத் தன்மை
இழந்துவிடும்...!!!
மனிதர்களை
மனிதன் என்றே சொல்லுங்கள்
இதைவிட கேடுகெட்ட (உயிரினம்) பெயர்
இல்லை இவ்வுலகில் ....!!!!
21.03.2025 இரவு 12.34-
வானத்தில் மிதக்கும்
வர்ணம் பூசப்படா
பஞ்சு மிட்டாயை
அள்ளி உண்ண
ஆசைப்படும் குழந்தை நான்...!!!
19.03.2025 காலை 10.46-
பூமியெங்கும் ஒளிவீசும் கதிரவன்
என் இல்லத்தில் மட்டும்
ஏன் இருள் சூழ வைக்கிறான்....???
இழவு வீட்டின்
சப்தத்தை மட்டுமே
கேட்டு வளந்தவனுக்கு
மங்கள இசையின்
ஓசை தரும்
அசௌகரியத்தை
எப்படி விவரிப்பேன்.....???
04.03.2025 இரவு 12.46-
வைக்கோல் கன்று கூட
தாயின் அன்பை பெற்றது
இறந்த பின்பும்
இங்கோர் கன்று
உயிரோடு ஏங்குகிறது
வைக்கோல் கன்றாக பிறந்திருக்கலாம்
எத்தனை அணைப்பும் ஆறுதலும்...!!!!
06.03.2025 இரவு 11.51-
அட்டை போல ஊர்ந்து வரும்
இரயில் பெட்டியை எண்ணிக் கொண்டே
கையசைத்து மகிழும் குழந்தையக் கண்டு
பொறாமைபடும் மூவெட்டைக்(24) கடந்த குழந்தை...!!!
என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவேன்..???
ஆறுதலின் உண்மை தன்மை
அறிந்த குழந்தைக்கு....!!!!-
நான் வாழ நீ வாழ்ந்த
சொர்கமெனும் கருவறைவிட்டு
வெளியேறிய பொன்னாள் இந்நாளே.....!!!
ஈரைந்து மாதம் சுமந்து -எனை
ஈன்றெடுக்காத
இரண்டாம் அன்னையே
எத்தவம் செய்தேன் இப்பிறவியில்
உனை உடன்பிறப்பாய் பெற...!!
எனை துயரிலிந்து மீட்டெடுக்க துடிக்கும்
உன்னிதயம் உனக்காக
எப்போது துடிக்கும்....???
சிறகசைத்து பறந்து
பெரு வானம் எட்டிவிடு
வாழ்த்துகிறேன்
நீ வாழ்ந்த கருவறையில்
குடியேறியவன் நான்....!!!❤️-
சுருக்கிட்டு கொலை செய்யப்பட்ட
மலர்களை சூடி உயிர்ப்பித்து
மறு வாழ்வு தந்தவள்
பிரம்மனின் பெண் வடிவம் இவளோ....???
16.02.2025 இரவு 11.02-
பள்ளியின் நுழைவாயில்
கடக்கும் போது
கருவறை வாசம் வீசியது
இரண்டாவது முறையாக கருவறைக்குள்
ஞானத்தை ஊட்டுவதற்காக
தத்தெடுக்கப்பட்டேன்
சிறையென நினைத்து வாழ்ந்த சொர்க்கம் அது
இப்பெருவெளியில் வாழ்தல்
அத்துணை கடினம்
அத்தகு கருவறை வெளியேறிய பின்....!!!
இரண்டாம் கருவறையும்
சுமையென தள்ளிவிட்டதோ...???-
வலிகள் ஆயிரம் தந்த இறைவன்
மீண்டெழுவதற்கு
வழி சொல்ல மறந்தானோ...???
மறதி எனும் பெரும் நோயால்
பாதிக்கப்பட்டவன் அவன்
அவன் நோய் தீர்க்க
யாரிடம் வேண்டுதல் வைப்பேன் .....???-