நாம்
வாழும்
வரை
எதுவும்
கடைசி
இல்லை
கடைசியாக
இருக்க
விடுவதுமில்லை-
யாராகினும் சரி, இன்றேனும்
அவளைத் தொடாமல் தூக்குங்கள்..,
அவளின் கடைசி ஆசை
அதுவாகத்தான் இருக்கும்..,
வேசியின் பிணம்!
-
பாதியில் நீ
மூடிவைத்த புத்தகத்தில்
கடைசி பக்கத்தில் உள்ளது
நான் சொல்ல நினைத்து
சொல்ல தயங்கி
சொல்ல பயந்து
எழுதி வைத்த
உனக்கான காதல் கடிதம்
கடைசிவரை
நீ வாசிக்காமலே..-
புன்னகை பூவிற்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மெர்சி சுஜாதா அக்கா 💐-
உன் அலட்சியத்தில் நான் இன்று கடைசி !
என் லட்சியத்தில் இன்று முதலில் நான் /-
உருண்டையான உலகத்தின்
எந்தஒரு விளிம்பும்...
எனக்கான கடைசி மனிதரை சுமந்திருக்கவில்லை...
எப்போதும் ஒருசுழற்சி...
ஏதோ மூலையில்...
எனக்கானவர்களை..
புள்ளிகளுடனும் கோடுகளுடனும்...
கோர்க்கவும் பிரிக்கவும் விளைகிறது...-
இறங்குமிடம்
தெரியவே
வேண்டாம்!
பயணித்து
கொண்டே
இருப்போம்
வாழ்வின்
கடைசிவரை!!-
எல்லாம்
இருப்பவர்களுக்கோ
உணர்வுப் பசி..!
ஏதும்
அற்றவர்களுக்கோ
உணவுப் பசி..!
இருந்தும்
இல்லாதவர்களுக்கோ
உயிர்ப் பசி..!-