நில நடுக்கத்தைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறேன்,
நிலவின் நடுக்கத்தை
இன்று தான் பாா்க்கிறேன்..,
மழையில் நனைந்தபடி
குளிரில் அவள்..,-
Writer
Yuvanian😍
fb_ udayragav
Instagram_Uday_Creator
Twitter_udayragav
B day: 26/0... read more
பெண்ணே, எப்பொழுதும்
மண் பாா்த்தே நடவாதே!
பூமி வெட்கப்பட்டு,
பூகம்பம் ஏதும்
வந்துவிடப் போகிறது..,
-
மழையினை நனைக்கக் கூடாது
என்றெண்ணியே குடைபிடித்து
ஓடி ஓடி ஔிகிறாய்!
மழைக்குத் தான் எத்தனை
காதல் உன்மேல்,
நீ ஔியும் இடமெல்லாம்
தேடித் தேடி வந்து உன்னில் நனைகிறதே..,-
இரவு நேரம்
இமைகளும் பாரம்
கழற்றிவைத்து விட்டு
காலாற நடந்து செல்லுங்கள்
கவிதை வீதியினிலே!
கருத்துக் குவியலிலே
சிறந்தததை எடுத்து
சிறப்பாய் எழுதுங்கள்!
இரவு தரும் உங்களுக்கு
இரவலாய்த் தமிழை..,-
ஆற்றில் விழுந்த இலை,
அடித்துச் செல்லப்பட்டது
சாக்கடைக்கு,
இலை இப்போதும் மிதக்கிறது..,
-
வலசை போகும் பறவையாவேனோ-திசை
வலது இடது என தெரியாமல்!
உலகைச் சுற்றவும் முடிந்திடுமோ- இந்த
ஊரைச் சுற்றும் குருவியாலே!-
இதோ,
இன்று நான்
உயிருடனே இருக்கிறேன்,
உங்கள் இரங்கற்பாக்களை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
வாழ்வின் கடைசி நிமிடங்களைக்
கழித்துக் கொண்டிருக்கிறேன்,
நான் இறந்து போன
அந்த நாளில் வந்து யாருக்காக
அழுது கொண்டிருக்கிறீர்கள்,
இதோ, இப்போது
உயிர்த்திருக்கிறேன்,
இருந்தும், உங்களின் நலமா?
வகைக் கேள்விகள் கூட
ஒப்பாரியின் மறு உருவமாய்த்
தெரிகின்றன..,-
ஆங்காங்கே
அரசியல்வாதி போஸ்டர்கள்
அருகில் ஐவுளிக்கடை
வாசலில் இப்படியொரு வாசகம்,
உண்மையின் நிறம்
வெண்மை..,-