ஈரடியில் அடக்க முடியாத ஒரு
அழகிய கவிதை நட்பு.-
கண்ணாடி பரவாயில்லை
விரிசல் விழுந்தபின்
பார்த்தாலும்
ஒரே முகம்தான் தெரிகிறது..
உறவுக்குள் விரிசல்
விழுந்த பின்
பல முகங்கள்.-
என் நாட்களுக்கு ரெக்கை
முளைத்து விடுகிறது...
அவசர அவசரமாக நம் தலையணை உறைகளும் போர்வைகளும் துவைக்கப்பட்டு
வாசனையாகின்றன..
உனக்குப்பிடித்த என் உடைகள்
அழகாய் இஸ்திரி போடப்பட்டு
உன் பார்வைக்கு தயாராகின்றன.
என்னென்ன வேண்டுதல்கள் எங்கெங்கு செல்ல வேண்டும்..அனைத்தும் திட்டம் போட்டு தயாராய்..
என் இரவுகள் மட்டும் நீளமாய்..-
நாளைக்கு. Friends
Birthday. Relatives
அடுத்தடுத்து
Phone
பண்ணுவாங்க
மதியம் ரெண்டாக. இன்னுமா
போகுது.
ஒரு wish illa. Wait panra
-
எல்லாருமே கருவறை கல்லறை ன்னு சொல்றாங்க..
கருவறையில் இருந்த ஞாபகம் இல்லை
கல்லறையில் இருக்க நாள் வரவில்லை..
Exam hall...School daysQuarterly halfyearly annual exam
பெரிய அறையை தடுக்கும் தடுப்புகளை அகற்றி நீள் வரிசையாக போடப்பட்டிருக்கும் bench.
வெவ்வேறு வகுப்பைச்சேர்ந்தவர்கள் கொஞ்சம் இடம் விட்டு அமர்ந்து....
ஆசிரியை கேள்வித்தாள் விநியோகிக்கும் முன் அப்படி ஒரு பேரமைதி..
மனம் ஓயாமல் இரைச்சலாய் படித்தது மறக்கக்கூடாது என்ற வேண்டுதலுட ன்..
Pin drop silence..அனுபவித்திருக்கிறேன்.
-
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....
(உயிரே உனக்காக)
முந்தி கேட்டது..சில வரிகள் நினைவில் இல்லை இப்போது.
எங்கள் பாப்பாக்காக மறுபடி
YouTube ல் போட்டு ரசித்தேன்.
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுஙகள்..ஜானகி அம்மா வின் குரலில்.-
நான் சாம்பார் வைப்பேன்
நீங்கள் தேங்காய் அரைத்து ஊற்றி வைப்பீர்கள்
அவர்கள் சாம்பர்பொடி போட்டுவைப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கைமணம்.
நான் வைப்பது எனக்கு பிடிக்கும்
இருந்தாலும் நீங்களும் அவர்களும் வைப்பதை ருசிப்பதும் பிடிக்கும்..
எழுதுவது என்பது ஒரு கலை.
ஒவ்வொருவருக்கும் ஒரு style.
எண்ணத்தின் வெளிப்பாடு..
பலதரப்பட்ட ரசிகர்கள்.
என் எழுத்தும் யாரோ சிலரால்
ரசிக்கப்படுவதால் தொடர்ந்து
எழுத தோன்றுகிறது🙏🙏💖💖
-
அக்கா பின்னும்
நான் முன்னும்அமர
அப்பா சைக்கிளை
உருட்டிகொண்டு வர
கூட நடக்கும் அம்மாவோடு
கதை பேசி
பயணித்த
இளமை பருவம்..
,👇👇👇-
சிவந்த இதழில் முத்தம்
விரும்பி கேட்டு மறுக்கப்பட்டால்
சிவக்கும் கண்கள்..
வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டால்
சிவக்கும் கன்னம்...-