நிஜமாக நான் நிழலாக நீ
கனவாக நான் கானலாக நீ
உடலாக நான் உயிராக நீ
கவியாக நான் கற்பனையாக நீ
நான் நீ அன்று நீ நான் இன்று
கானலாக,...!🌱-
பிறப்பிற்கு இன்னொரு பிறப்பு வயது தான் ஒன்று
வாழ்வில் கிடைக்கட்டும் பல சான்று மணம்வீசும் மலர் தேரே மனதால்(கரத்தால்) வாழ்த்துகிறேன் நூறு வாழ வேண்டும் புகழ்பல
பெற்று வணங்குகிறேன் நானும் உன்னை நினைத்து
கவிதையும் காணலாகட்டும் காலமும் பதில் சொல்லட்டும் உன்பிறவியும் எனக்கு தேவையென்று வயதும் கடந்தோடும்
வாழ்த்துகளும் வந்து சேரும் வெற்றியும் உனை சூழட்டும்
🎂இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂💐சர்ஷித்💐
மனம்மகிழ்ந்து வாழ்வில் பல உயரங்களை
கடந்திடவே முதல் வாழ்த்துக்கள்
பிறப்பில் பிறந்த புன்னகை
பிறந்த மேனியாகவே வலம் வரட்டும்
என்றும் இன்புற்று வாழவே வாழ்த்துக்கள்
💐🙏🏻💐GOD BLESSING TO ALL💐🙏🏻💐-
காலத்தின் பிடியில்
கடிகாரம் சுழன்று
கொண்டிருந்தாலும்
காலம் சுழன்று
கொண்டிருப்பதில்லை
நம்பிக்கையுடன்
நகர்ந்து செல்லலாம் ⛳
-
கடைசி ஒருமுறை
உன்னை நினைத்து
பார்க்கிறேன் நீ
வாழ்ந்த
வாழ்க்கையையும்
மற்றவரிடம்
அன்பாகவும்
உதவியதையும் என்னால்
வாழ முடியாத என்று,...🙏
-
தாய்மை மனதுடன்
எத்தனையோ மனங்களுக்கு
உதவினாய்,...
அளவில்லா எண்ணிக்கையை
அழகான குரலால் குவித்தாய்,...
வயதுவரம்பில்லாமல்
அனைவரையும் போற்றினாய்,...
வாழும் காலங்களில் மறைந்து
வாழ்ந்த காலத்தை நினைவில்
கொடுத்து சென்றாயே,...🗿
அனைவரிடமும் சொல்லும்
God bless you 🙏🙏🙏
-
பசிக்காக தினமும் சாலையோர
வனப்பகுதியில் அங்காங்கே
அலைந்து திரிந்திருந்த
மந்தியொன்று ஏனோ
தவறி வாகனத்தில்பட்டு
உயிரிழந்தது,...!
அதை பார்த்து மனதளவில்
வருந்தி நகரவே சற்று
நேரத்தில் யாருமின்றி
அடக்கம் நடந்தது !🙏🙏🙏-
மறைந்து போன
முகங்கள் எல்லாம் மறைந்து
போனதாகவே இருக்கட்டும் !
திரும்ப திரும்ப
நினைவுக்கு வந்து
என் நினைவுகளை திருடிட
வேண்டாம்,...!-
எத்தனையோ
இதயத்துடிப்புகள்
ஒன்றன்பின்
ஒன்றாக இணைந்து
துடித்தாலும்
அந்த இதயம்
வாழ்வது ஒற்றை
துடிப்புகளில்,...-