பேசி பேசி
இங்கு எதுவும்
தீரவில்லை...
ஏதாவது பேசுங்கவென
கேட்டு சலித்தப்பின்
நாவில் தீர்ந்த
உமிழை தவிர!
-Anisamy— % &-
தமிழினம் வாழும்💪
யானைகட்டி போரடித்த சோழ நாட்டவள்🌾
கவிதைகளின் மேல் நாட்... read more
தொடர் வினையாம்
உன் நினைவுகள்,
தெரிந்தே தொடுகிறேன்,
தொடர்கிறேன்,
தொலைகிறேன்!-
உன்னில் இன்னும்
இன்னும் மூழ்க
தான் ஆசை....
நான் தேடிய மட்டிலும்
இதுவரை என்னை
காணவில்லை....
அதனால் தான்
இன்னும் மூழ்க
துடிக்கிறேன் உன்னில்!!
-
என் ஆசையை
நிறைவேற்ற
நேரம் ஒதுக்குவாய்
என்று
நினைத்திருந்தேன்...
என்
ஆசையை பற்றி
கேட்கவே உனக்கு
நேரமிருக்காதென
தெரியாமல்!-
என்னில் பாதியாக
நீயிருக்க
ஆசையில்லை
எந்தன் முழுமையாக
நீயிருக்கதான்
ஆசையெனக்கு❤-
மனமறிந்தும்
மனையறிந்தும்
மணமுடிக்கும்
நாளறிந்தும்
மனதோடு
உயிராடும்
மணவாளன்
குணமறிந்தும்
மாலையிடும்
வேளைவரை
நங்கையிவள்
வான்பிறை!
-
மனமறிந்தும்
மனையறிந்தும்
மணமுடிக்கும்
நாளறிந்தும்
மனதோடு
உயிராடும்
மணவாளன்
குணமறிந்தும்
மாலையிடும்
வேளைவரை
நங்கையிவள்
வான்பிறை!
-
எளிதில் முடிவதில்லை
இந்த சண்டை
உனக்கு
என்ன வேணும்
என்று நீ
கேட்கும் வரை!
-
நொடிக்கு நொடி
உன்னிடம்
கோபித்துக் கொள்ளும்
இந்த உணர்விர்க்கு
என் இதயம்
இட்டபெயரோ
காதல்❤-
இன்றெல்லாம் அவன்
என் உறக்கம்
திருடுவதில்லை
மாறாக
இரவை திருடுகிறான்!!
-