மனமே
நீ
எல்லா எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி காயப்படாமல் கடந்து
சென்றால் போதும்...-
நாகவள்ளி க
(Nagavalli)
210 Followers · 177 Following
Joined 23 September 2018
12 JUL 2023 AT 11:52
24 MAY 2023 AT 23:11
என்னை நம்பு..
உன் கூந்தல் சொல்லும் கதைகளை விட
உன் நெற்றியில் ஆடும் ஒற்றை முடி சொல்லும் கதையில் சுவாரஸ்யம் அதிகம்...!-
21 MAR 2023 AT 23:00
என்னோடு நீ இல்லாத நொடிகள்
இசை இல்லாத பாடல் போல
இனிக்கவில்லை!
நீயே என் பாடல்!
நீயே என் இசை!❤️😍
-
14 FEB 2023 AT 21:21
நிறைய நிறைய
அழுது புலம்பியாயிற்று!
இருப்பினும் இன்னும்
காயத்தின் அளவு குறைவதில்லை!
இனி மேலும் கண்ணீர் சிந்த
கண்களில் நீரில்லை!
மனமே பழகிக் கொள்!
மீண்டும் அமைதி கொள்!!!-
5 DEC 2022 AT 20:18
நீ
நினைத்தாலும் சரி
நினைக்காவிட்டாலும் சரி
நான் உன்னோடு வருவேன்
இந்த மழைத்துளி போல்
துளி துளியாக!-
5 DEC 2022 AT 20:05
யாருக்காயினும்
அன்பை கொடுத்த பின்
அவ்விடத்தில் இருந்து
உடனே சென்று விடுங்கள்!
ஏனெனில்
அவர்கள்
அன்பின் பரிசாய்
வலிகளை தரக் கூடும்...!-