அன்புள்ள காதலியே உனக்காக ஒரு கவிதை...
கடக்க போகும் ஆயிரமாயிர வருடங்களுக்குமான முன்னோட்டமாக...
கண்பார்க்கும் முன் எனக்குள் நிறைந்தவள்,
பார்த்ததும் உனை தந்துவிட்டாய்...
உனக்கென நினைப்பதற்குள்,
எனக்கெனவே எல்லாம் முடிக்கிறாய்...
காதல் மோகம் காமமென காலசல்லடையில் எல்லாம் கரைந்தோடினாலும்...
சல்லடையில் நிற்கப்போவது நம் அன்பாகபோகட்டும்...
உன்னை உயிரென ஒருகுடும்பம்...
என்னை உயிரென ஒருகுடும்பம்...
அதிவிரைவில் ஒரே சங்கமமாய்...
பொய்க்கால் கட்டிக்கொண்டு என்னை நானே உயர்த்தி கொண்டேன்...
நாம் வாழும் உலகின்
பிரிதொரு பரிணாமத்தில் உனை தாங்கிப்போக...
நம் பெருவாழ்வின் காதல் முழுதும்...
உன் முதல் ஸ்பரிசத்தில் பருகிவிட்டேன்...
நிம்மதியோடு விடைபெருகிறேன்...
உன்னின் நீட்சி நானாகவும்...
என்னின் நீட்சி நீயாகவும்...-
வார்த்தைகளற்ற கனத்த மௌனத்துடன் கடந்து கொண்டிருக்கின்றன நொடிகள்...
நொடிகளை சுமக்கும் நொடிமுள்,
இப்போது என்னையும் சுமந்துகொண்டிருக்கிறது...
கடந்திருந்த காட்சிகளை மீண்டும்
மீண்டுமாக ஓட்டிபார்க்கிறேன்...
காலப்பயணத்தில் முன்னும் பின்னுமென
கரைத்தேடி தத்தளிக்கிறேன்...
அடுத்த நொடி அதிசயத்திற்காக எல்லோரையும் போல காத்திருக்கிறேன்...
வாழ்வின்விடை தேடிய மீளா பெரும்பயணத்தின்,
கொஞ்சம் களைத்துப்போன
வழிபோக்கன்...-
அவள் வருவளா..
கண் படுவாளா...
எனை உணர்வாளா...
தனை மறப்பாளா...
விழி தொடுப்பாளா...
அக்கம் கொடுப்பாளா...
பதம் உதிர்ப்பாளா..
உள்ளம் பகிர்வாளா...
கை இனைவாளா...
தனை தருவாளா...
இவையாவும் வேணாமென
துயில் எழுவாளா...-
தூரிகையின் மிச்சத்தில் ஒட்டியிருக்கும்,
வர்ணத்தின் ஏக்கத்தை... — % &-
நே(ற்)றுக்கும் இ(ன்)றுக்குமான ஒற்று-ஐ சம்பந்தம்...
(நா)ளை மனதில் நெடிந்தோடுகிறது...— % &-
அன்பின் பாதியும்,
நிலவின் மீதியுமாய்,
எனக்குள் நுழைந்தவள்...
பட்டுப்புழுவாய் பிரபாவிக்கிறாள்...
இன்றோ நாளையோ...
ஜென்மத்தின் நீச்சிஒன்று
காத்திருக்கிறது....-
தூக்கம் அத்தியாவசியமானது தான்...
எப்போதும் இரவுடன் கிடக்கும் தூக்கத்தை,
இன்று இருளுக்கு தாரைவார்த்துவிட்டேன்..-
நிலாவை வேடிக்கைபார்க்க
தொடங்கியநாளில் இருந்து,
கலங்கங்கள் வெண்மையை
கூட்டிக்கொண்டே போகின்றன...
கருமை, வெண்மையின் தூரிகை...-
வேண்டும் வேண்டாமென முடியாமல்,
துளியும் உன் நிழல் கலக்காமல்,
வீணாய் போகிறதோ?
உன்னில் நான்எனும் பேராசை...-