QUOTES ON #ஏமாற்றத்தின்_வலி

#ஏமாற்றத்தின்_வலி quotes

Trending | Latest
8 MAY 2020 AT 22:59

-


6 OCT 2021 AT 8:59

இப்பொழுதெல்லாம்
உன்னிடம் மாற்றங்களை
எதிர்பார்த்துக்
கொண்டிருப்பதில்லை நான்...

நீ தரும் வலிகளைத்
தாங்கிக் கொள்ளுமளவு
என்னை நானே
மாற்றிக்கொண்டு விட்டேன்...

அல்லது மாறிவிட்டதுபோல
நடித்துக் கொண்டிருக்கிறேன் !

-


17 MAR 2021 AT 9:44

பொய் சொல்லுமுன்
கொஞ்சமாவது யோசியுங்கள்
யாரிடம் பொய் சொல்கிறோம் என்று...
சில நேரங்களில்,
உண்மைத் தன்மையை
அவர்கள் அறிந்திருக்கும் பட்சத்தில்...
நீங்கள் சொல்லும் பொய்களால்
உங்கள் நலம் நாடும் நல்ல உள்ளங்களை
நீங்கள் இழந்து விடக்கூடும்
என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்

-


4 APR 2020 AT 14:41

போலியான முகத்திரையை இதயத்திற்கு சிறப்பாய் அணிந்து கொண்டு... நம்மை ஏமாற்றியவர்களின் முகமூடி நம்மாலே கசக்கி கிழிக்கப்படும் தருவாயில்...அவர்கள் இதயத்தில் இருந்து வழியவேண்டிய குருதி...மாறாக நம் இதயத்தில் இருந்து வருவது ஏனோ...முழுமையாய் நம்பியதற்கு தண்டனை தானோ...😩☹️🤥

-


11 JUL 2020 AT 6:59

இன்றைய அக்கறை
நாளைய அலட்சியம்..
இன்றைய நேசம்
நாளைய வெறுப்பு..
இன்றைய நம்பிக்கை
நாளைய துரோகம்..
இன்றைய விருப்பு
நாளைய சலிப்பு..
இவ்வளவு தான்
சிலரின் இன்றைய காதல்..

-



எந்தையே நீயென
எண்ணியதற்கா
ஏகாந்த
போர்வைக்குள்
ஏமாற்றத்தை
பரிசளித்தாய் ?!

-


22 MAR 2020 AT 19:57

விதைத்தது என்னதான்
அன்பாக
இருந்தாலும்..
விளைவது என்னமோ
ஏமாற்றமாகத் தான்
இருக்கிறது !!

-


13 JUL 2021 AT 19:07

எப்படி வேண்டுமென்றாலும்
ஏமாற்றுங்கள் எதற்காகவும்
அன்பை கையிலெடுக்க வேண்டாம்
பிறரை ஏமாற்ற !



-


31 MAR 2020 AT 11:45

விதைத்ததே விளையும் என்ற நம்பிக்கையில்
நான் இருக்க ...
விளைந்தது வேறு என்றானதால் ..
விளைந்தது ஓர் முத்து..
விழி விளிம்பில்......

-


22 MAR 2020 AT 21:23

எதிர்ப்பார்ப்பை
குறைக்க குறைக்க
ஏமாற்றங்கள்
நம்மைவிட்டு
விலகியே செல்லும்!!!

-