நந்த குமார்   (நந்து)
307 Followers · 99 Following

STUDENT
Joined 24 May 2018


STUDENT
Joined 24 May 2018
17 MAY 2020 AT 20:15

விடுமுறை என்பது
நாட்களுக்கு தானே..
உன்னை பற்றிய
நினைவுகளுக்கு இல்லையே..

-



வெயிலின் தாக்கத்தை தணிக்க
கம்பு கூழில் வெங்காயம் மிதக்க
மிளகாய் கடித்தவன்..
இன்று, சாராயக் கிண்ணத்தில்
மூழ்கி மிதக்கும் பனிக்கட்டியில்
உறைந்து போகிறான் !!

-


26 DEC 2019 AT 18:21

பார் கண்ட பன்மையில்
நான் கண்ட ஒருமை
வான் காணாத பதுமை நட்பை
நான் கண்டேனே தோழி உன்னிடம் !

-



முத்தமிழின்
மூன்று 'லழள'கரம்..
கரம் சேரும்
உன்னதம்
"தொழிலாளர்"

-



சற்று நில் நதியே..
அன்னைப் போலவே நீயும் நிற்காமல்
ஓடி உழைத்து, மகிழ்விக்கிறாயே..
நீ எப்போதும் இளைப்பாறுவாய் ?

காலம் நிற்காமல் காடு தாண்டி ஓடுகிறாய்
கிளைகள் தாழ்ந்து தடவிக் கொடுக்கும்போதா ?

நீயும் பெண் என்பதால் மரங்கள்
மலர் தூவி ஒப்பனை செய்யும்போதா ?

ஓடிய நீ நின்றெழுந்து அருவியாய்
அசுர உருவம் அடையும்போதா ?

கொஞ்சம் சொல் நதியே!!

-



வானத்தில் மலர்ந்த மறையாத
வானவில்,
அந்த அழுக்கு கண்ணாடியில்
அவளுடைய அழகான முகத்தை
பார்த்ததும் தொலைந்தவன்,
பாறை கரைந்து பாழாக,
இளமை வெடித்து
இரண்டாகி கொதிக்கிறது !

-



உலகின் கனவுகள் ஒன்றாகி
ஒரு விடியல் நதியில் கரைகிறது
உயிரின் கனவே உனைத் தேடி
என் ஒவ்வொரு விடியலும் அலைகிறது..!

-


29 MAR 2021 AT 20:22

கலங்கள் எதிரே சிரிக்கிறது
கால்கள் புறப்பட நினைக்கிறது..
உடல் பொருள் மட்டும் உள்ளது
என் ஆன்மா அது
உன்னில் எங்கும் மிதக்குகிறது..
நாட்கள் முடிந்து அலைகிறேன்
இதயம் வெடித்து தவிக்கிறேன்..
நினைவால் இனி கூட வரும்
இதுபோல் இல்லை வேறு இடம்..

-



அந்திக்கனவுகளுக்கு 
விடைகொடுத்து 
சாளரம் நோக்கிய கண்களிலிருந்து 
தொலைந்து போனது
எனது இருவிழிப்பந்துகள்.. 

பார்வை பரிதவிப்புகள் 
அந்தக் கண்களில் நிழலாட
உள்ளுக்குள்ளோ
கந்தகத் தாபங்கள்..

நிலவு, நீரோடையிடம்
நிதர்சனமாய் கலந்துநிற்க 
நான் மட்டும் தனியே..

-



உறைந்த உரையாடலை
உலர்த்த உணர்வில்லையா ??
உறைப்பனி உறங்குமுன்
உயிர் உறவா உடன்வா !!

-


Fetching நந்த குமார் Quotes