தோழி கவிகாரிகை   (✍🏻தோழி கவிகாரிகை)
356 Followers · 41 Following

read more
Joined 14 June 2020


read more
Joined 14 June 2020

உன் மீதான
எனதன்பின் அடர்த்தி
துளியும்
குறையவேயில்லை யென்பதை
எனக்குணர்த்தத் தான்
வழிந்து தொலைகிறது
இந்த கண்ணீர் !
உனதிருப்பை
அறிய
நேர்கையிலெல்லாம்... 🍂

-



கடைசிப்பார்வை
உன்னுடையதாய்
இருந்திருக்கலாம்...
மீண்டுமொரு ஏமாற்றம் !

-



உன் பேரன்புக்காரியிடமிருந்து...

-



இந்த இரவானது
உறங்கவா?
உன் இருப்பை உணர்ந்து
உறையவா?
எப்படி இருக்கிறாய்
அன்பே.....!

-



எங்கோ இருக்கிறாய்..!
நலம் தானே???!

-



வாரம் தாண்டாத
நம்
தொடர்பற்ற நிலை
வருடம் கடந்ததை
உணர்வாயா?!

-



சில நாட்களே செல்லாத
வழித்தடம்...
அவரவர் இருப்பது போலத்தான்
இருந்து கொண்டிருக்கிறார்கள்...
அப்படியே இருப்பார்களென
நான் நம்பி கொண்டிருந்தவர்கள்
மாறியதால்
அத்தனையும் மாறியதாய்...
அவ்வனைவருமே மாறியதாய்...
உள்ளத்தில் காட்சிபிழை !

-தோழி கவிகாரிகை


-



அங்கு சுற்றி
இங்கு சுற்றி யென
எங்கு சென்றாலும்
இறுதியில்
உன்னிடமே திரும்புகிறது
என்னிலிருந்து
முழுதாய்
உன்னை தூக்கியெறிய
துணியாத இம்மனது!

-



நீண்டநாள்
துவைக்கப்போடவே
மனமின்றி பொத்தி பொத்தி
பார்த்துக் கொண்டேன்...
இன்றேனும் துவைப்போமென்று தான்
துவைத்திட்டேன்
அரைமனதோடே
உன் வாசம் நுகர்ந்த
உடையொன்றை...! 🤍

-



நீண்ட நாட்களாய்
எழுத நினைத்து
முடி(யா)(க்கா)மல்
மடித்தே வைத்திருக்கும்
அந்த உணர்வு ததும்பலின்
கவிதை ஒன்றிற்கு
கொட்டி தீர்க்காமல்
பொத்தி வைத்திருக்கும்
என் காதலின் சாயல்!!!

-


Fetching தோழி கவிகாரிகை Quotes