மகி'ழம்பூ தென்றலுக்கு
ஓர் வாழ்த்து...
-
கொங்கில் வசிக்கும்
கேரள நாட்டினள் !
அடடா !!!
என்ன விந்தை இது...
முதலில்
அழைக்கிறது
அழகாக்குகிறது
பிறகு
அடிக்கிறது
அழவைக்கிறது
அணைக்கிறது
இறுதியில்
அணைத்தும்விடுகிறது..
காதல் ஒரு கர்மா !-
அவனின்
அறைமுழுக்க
புத்தகங்கள்...
காதல்கவிதைகள்
காதல்கதைகள்
என விதம்விதமாக..
காதலைச்
சொல்வதெப்படி
காதலில்
ஜெயிப்பது எப்படி
என ரகம்ரகமாக...
புத்தகங்கள்
இருப்பதால்தான்
என்னைப்
பிடிப்பதில்லையா
எனக் கேட்டேன்...
உன்னை
எத்தனை முறை
படித்தும்
புரிந்துகொள்ள
முடியவில்லை...
புத்தகங்கள்
படித்தாவது
கற்றுக்கொள்கிறேன்
உன்னைக்
காதலிப்பது எப்படியென
என்கிறான் !-
அவன் தேவன்
அவன் ஒரு புத்தன்
அவன் பரிசுத்தன்
என்னை
நிராகரித்துச் செல்ல
அவனுக்கு பெரிதாய்
காரணங்கள்
தேவைப்படவில்லை
ஏனென்றால்
தேவதையின்
அம்சங்கள் எதுவும்
என்னிடமில்லை...
கலப்படமற்ற
சாத்தானை
இங்கு எவருக்கும்
பிடிப்பதுமில்லை !-
கொடியேற்றி
முடிந்ததும்
ஆரஞ்சுமிட்டாய்க்கு
பதிலாக
ஆசை சாக்லேட்
கிடைத்தபோது
இந்தியா
வல்லரசாகிவிட்டது
என நம்பிய
குழந்தைப்பருவம்தான்
எத்தனை அழகானது !!!-
துன்பம் துயரம்
துக்கம் கவலை
வலி வருத்தம்
சோகம் ஏக்கம்
துரோகம் ஏமாற்றம்
காயம் கண்ணீர்
இதத்தனையையும்
கடவுள் ஒருவருக்கே
கொடுக்க நினைத்தால்
அவர்களை காதலிக்க
வைத்துவிடுகிறான் !
-