உன் கர தலையணையும்
தேக மெத்தையும் போதுமடா
என்னுறக்கத்தை உறுதி செய்ய
என்னுள்ளத்தை உனதாக்க...💖
-
🔥from vellore🔥
En unarvil karpanaii yetri padaitha kiruk... read more
என் நிலையில்லா உயிரின்
நிரந்தர விருப்பமே
உன் உயிருடனே
கலந்திருத்தல் தானடா...💞💞
என் உயிரின் பிரிவும்
வேண்டும் வரமே
உன் மடியில்
இறுதி தருணம் தானடா...😍❤️
ஆசை காதலா❤️❤️❤️...-
இது காதல் இல்லை
இருந்தும் கொண்டாடுகிறேன்...
இது கானலும் இல்லை
இருந்தும் மறுக்கிறேன்...
ஆம்!!!
இவ்வுலகில் உண்மை காதலே இல்லை
இறுதியில் விலகுகிறேன் அதனாலே
இருந்தும் கலங்குகிறேன் அறியாமலே...
-
என் அழகுக்கு
அழகேற்றுவது புன்னகையெனில்
அந்த புன்னகையை
என்னுள் ஏற்றுவதே நீதானடா...❤️❤️
-
இறுகும் கண்கள்
உறக்கத்திற்கு தடையாகுமே...
சுழலும் எண்ணங்கள்
சோர்விற்கு சக்தியூட்டுமே...
தாங்கும் உறவுகள்
தூரமாய் பார்க்குமே...
ஏங்கும் கண்ணீர்துளிகள்
ஏமாற்றத்தில் நிறையுமே...
மாதம் மூன்று நாட்கள்
முடிவுகள் அனைத்தும் மாற்றுமே...
முதுகுதண்டும்
மிதிபட்ட உணர்வளிக்க
வயிறின் உச்சக்கட்ட இறுக்கமும்
சொட்டு சொட்டாய் ஊறுமே...
வாட்டி வதைக்குமே...
கசியும் துளிகள் ஒவ்வொன்றும்
நரகத்திற்கு வழிகாட்டுமே...
வலியை ஊட்டுமே...
ஒவ்வொரு உதிரத்துளியும்
பெண்ணாய் பிறந்ததற்கு
போராட்டம் தினம் செய்வதற்கு
எங்கள் வலிமையை சோதித்து
வெற்றி திலகம் சூட்டுமே...
உதிரம் யாவும்
வெற்றி திலகம் இடுமே...
மங்கையர்க்கரசிகள் எங்களுக்கு...
மங்கையர்க்கரசிகள் எங்களுக்கு...-
என் சினத்திற்கு
காத்து இருந்தாயா...🤷
இல்லை என் சிரிப்பு
ஓயும் வரை ஓய்வெடுத்தாயா...🧐
என் அழுகையை
வெறுத்து ஓடுகிறாயா😔
இல்லை என் அழகை
மட்டும் தேடுகிறாயா...🧐
என் வெறுப்பை ஏற்க
முடியாமல் தவிர்க்கிறாயா...😵
இல்லை என் வெறுமையை
நிரப்ப தெரியாமல் தவிக்கிறாயா...😵
என் மகிழ்ச்சி தருணத்தில்
மயங்கி வந்தாயா...🤷
இன்று துயர் வீச
விழித்து விலகுகிறாயா...😔
நீ நிஜத்தில்
காதல் தான் செய்தாயா🧐
என் கல்நெஞ்சக்கார கள்வனே
நீ காதல் தான் செய்தாயா...
இல்லை காத்திருந்து
என்னை வதம் செய்கிறாயா...🤔-
தன்னை இழந்து உன்னில் இணைய
தாவி வரும் என்னுயிரை
தவிக்கவிடாமல் தாங்கிபிடித்து
தழுவி தாலாட்டி
அலையும் அதற்கு
உன் கண்ணசைவில்
மோட்சமளிப்பாயா நீ...?
சேர்ந்து துடிப்போமா நாம்...?
விடைக்காக காத்திருக்கிறேன்...
விழியசைவிற்காக ஏங்கியிருக்கிறேன்...❤️
-
காதல் நோயில்
இனியும் சிக்க கூடாதென்று
தடுப்பூசியிட்டு திரிந்த என்னுள்ளே
காதலின் அனைத்து அறிகுறியும்
பரவவிட்டு சென்ற இ(ந)ச்சுயிரியே...
உயிரையே தருகிறேன் உன்னிடம்...
விலக முடிவெடுத்தால் உயிரையும்
எடுத்து செல்வேனென்று எனக்கு
சத்தியம் ஒன்றை நீ செய்தால்...-
தொலை தூர
தொடர்வண்டி பயணமதில்
ஜன்னலோர இருக்கை
கிடைக்காத ஏக்கத்தை விட
இதமான இந்நேரத்தில்
நீ என்னருகில் இல்லையே என்ற
வருத்தம் தானடா
உயிர் கொள்கிறது...❤️
-
இந்த தேவதையின்
மேனி தீண்டும்
வரம் பெற்றவை
சில மழை துளிகளும்
மன்னவன் உன்
வியர்வை துளிகளும்
மட்டும் தானடா...🙈-