சுட்டிதன
புத்திசாலி
இவளே
கீழே படிக்கவும்
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️-
இளைப்பாறல் தேடி
துடித்திடும்
வேளையில்
என்னுள் இருக்கும்
உன் இதயத் துடிப்பின்
ஓசை கேட்டே மகிழ்ந்து
கொள்கிறேன்!!!!!
💕💕💕💕💕💕💕💕-
நினைவுகள் சுட்டெரிக்கும் வெப்பம்
உணர்கிறாயா எனும் கேள்வியுடன்
மனு அனுப்புகிறது என் இதயம்.....
காத்திருப்புடன் கண்ணீர் சிந்தும் எனக்கு.....-
பேனாவின் மையில் இருந்து
காகிதம் முழுவதும் தீட்டிய...
எனது வலிகள் தாங்கிய
வரிகள் அனைத்தும்......
உனது இதய வாசலில்
உரக்கச் சொல்லும்
எனது காதலை.....-
விழி நோக்கிய
பாதை கண்டு
பயணித்தாயோ..!!
இல்லை..
பாதம் கண்ட
பயணத்தை
பயணித்தாயோ..!!
இல்லையடா கண்ணா
உன் இதயத்தின்
ஓசை கண்டு
நின்றேனடா...
பாதை மறந்து...
-
இருள் சூழ்
இனிய
இரவில்
இரவல் நிலவொளியில்
இரு
இதழ்களின்
இணைப்பில்
இன்ப
இசை பிறக்கும்
இதய ஹார்மோனிய பெட்டியில்
இடைவெளி
இல்லா
காற்று வெளியிடை
காண்போம்
கண்ணம்மா ...-
உன் ஓரவிழிப்பார்வை எனைக்கொலை செய்து
உன் இதயசிறையிலடைத்து
என் நினைவுகளெல்லாம்
ஆட்கொண்டு
என் இமையெல்லாம் உன் பிம்பமாக
என் இதழெல்லாம் உன் புன்னகை தவழும் உன்னை தாங்கி நிற்கிறேன் நானும்
நம் காதலிலே...-