காதல் திலகம் நெற்றியில்
இட்டுச்சென்றது..
கவிதிரள்..-
இரு கடைக்கண் பார்வையும்
ஓர் சேர் நெருங்கிய தருணம்..
பனிமழை பொழிந்திட
பாவை அவளோ பார்வை வீசி
செல்கிறாள்..
என்னில் ஒரு மின்னலாய்..-
நேற்று நான் தொலைத்த..
காதல் என்ன அத்தனை இக்கட்டான சூழ்நிலையா..
இல்லை இல்லை இந்த காதலை விட
இந்த அன்பு தான் அத்தனை பாடு
படுத்துகிறது..🥳
-
உன்னை கண்டதும் கட்டிக் கொண்ட
என் கண்களையும்..
அதே நேரம் பிதற்றல் கொள்ளும் என் நாவினையும்
திட்டித்தீர்க்கவா..?
இல்லை கட்டி அனைக்கவா..!
-
என் உலகம் அவன் என்பதை
யான் சொல்லாமலே அவன்
அறிவான்..
அவன் வாய்மொழியே
எந்தன் வாழ்க்கையாய்
யான் சூடிக்கொண்டதை..
இன்னும் அறியாமலா
இருந்திருப்பான்..
இன்னும் யான் யாது
செய்ய வேண்டும்..
தூது அனுப்பு..
என் துணையாய் நின்று..!
-
இறுக பற்றிய கரம்
இனி எதற்கும் பிரிவதில்லை
என்ற போதும்..
பிரிவு நிரந்தரம் ஆனது..!!
சார்ந்தவன் நிரந்தரம்
இல்லையென்றாலும்
சான்றுகள் நிரந்தரம் தானே..!-
உன்னை சிந்திக்க இயலாத நேரம் எல்லாம் உன் சிந்தனையே என்னில் இயங்கி கொண்டிருக்கிறது...
கள்வனே..🥳-
என் நேசிப்பு அனைத்தும்
உனக்கே அர்ப்பணம்
என்றான போதும்..அவை
மீண்டும் மீண்டும்
புதுப்பிக்கப்பட்டு
உன்னிடமே திரும்பும்
இக்காதலை
என் செய்வேன் ..
உன் அத்தனை காதலும்
என்னிடம் நிரம்பி இருக்க
..N💞N-
பேருந்து இடநெரிசலில்
எதிர்பாரமாய்
முட்டிக்கொண்டதில்
உன் கண் கண்ணாடி
என் சிகை கோதி விட்டு
உன்னையே இரசிக்கச்
செய்ததை
உன் கண்களாலே நான்
கண்டுணர்ந்தேன்..
-