நான் நலமாக தான்
இருக்கிறேன்
என்பதற்குள்
துண்டிக்கப்பட்ட
உன் அலைபேசியால்
என் இதயம்
அவசரசிகிச்சைபிரிவுக்கு
உட்படுத்தியது போல்
இருக்கிறதடி
உன் மௌனம்
என்னை சிதைத்து
கொண்டு இருக்கிறதடி
மெல்ல மெல்ல..!!!
கவிதையின் காதலி (சரோ ❤️ சரண்) ✍️
-
அதிகாரத்திற்கு அடிபணியாதவள்..
தன் எண்ணச்சிதறல்களை எழுத்தாணி... read more
சற்று
பொறாமையாக தான்
இருக்கிறதடி..!!!
நான் உன் கன்னத்தில்
முத்தமிடுவதற்கு
முன்னதாக ....
முந்திக்கொண்டு
முத்தமிடும் உன்மீதான
பருக்களை பார்த்து...!!!
-
எதுவாயினும்
சேமித்து வைத்தே
பழகியவள்...
ஆதலால் தான்
என் காதலையும்
சேமித்து வேத்துள்ளேன்
மனதோடு
உன்னோடு செலவழிக்க
தெரியாமல்...!!
-
நீயில்லா உலகத்தில்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறேன்....
உன் நினைவுகளே என்
உலகமானதனால்...!!
-
பிரிவின் தவிப்பு
பிரியாமல்
தான் நிற்கிறது ...இதயத்தில்
கனவு கண்ட நாட்களெல்லாம்
கலைந்து போகவும் மறுக்கிறது...
சிரித்த நாட்கள் எல்லாம்
என்னுள்
சிதறி போய்தான் கிடக்கிறது...!!!
உன்னை கண்டு களித்த
விழிகளெல்லாம்
இமைமூடவும் மறுக்கிறது!!!
யாது செய்வேனடா???
பிரிந்தது என்னுள் இருந்த உன் உயிரை அல்லவா!!!
-
சிறு பிரிவு நம்மை
என்ன செய்துவிட கூடும்...
பெரும் காதலில் மூழ்கி
மூச்சடக்குவோம் வா!!!
கவிதையின் காதலி (சரோ ❤️ சரண்)-
விழித்திரையில் கண்டதை
அகத்திரையில் மறைத்து
கொண்டாள் அதுதான் காதல்....-
ஒருவர்
வாழ்க்கையில்
வரம் பெறும் காதல்..
பிரிவினால் சாபமானது...
இதயத்திற்கோ ஆரா
ரணமானது..!!
-
அன்பாய் கொடுக்கும்
பரிசுக்கெல்லாம்
ஆயுள் அதிகம் தான்...
உயிர்மரிக்கும் வரை
உணர்வோடு கலந்தே இருக்கும்..!!-