பிறரை நம்வசம்
இழுக்க செய்யும்
நல் ஆயுதம்...
-
15 JUN 2018 AT 19:51
அடங்கி விடாதே அன்பிற்கு ...உன்னை அலட்சியப் படுத்தும் அளவிற்கு
உருகி விடாதே பேச்சிற்கு ...பிறகு
உனக்கு பிடித்த அனைத்தும் சேரும் குப்பைக்கு.....
-
7 MAY 2024 AT 6:42
மண்ணை
இறுகப் பற்றி
உருகி இழுக்கும்
நீரைப் போல
மண்ணில்
இருக்கும் வரை
நிலைத்து நிற்க
தேவைப் படும்
ஆணிவேர்-
6 MAY 2024 AT 18:50
பார்க்கும் பார்வையில்
பழகும் முறையில்...
எந்த நொடியில்
மொட்டவிழும் என்று
எவரும் அறியாத
உன்னத உணர்வு..
தெளிந்த மனதுக்கு
பொக்கிஷமாக
உயிர்த்திருக்கும்
உதிரம் உறையும் காலம்வரை..
*போக மனதுக்கோ
மோகம் தீரும் வரை...-
6 MAY 2024 AT 13:54
மனதில்
ஊற்றெடுக்கும்
அமுத சுரபி..
தானாக
வரவேண்டும்
வீணாக
கெஞ்சுதல் கூடாது.-
6 MAY 2024 AT 14:14
போடா என்றதும்
போகமாட்டேன்
என்பதும்....
எரும என்றதும்
நானே தான்
என்பதும்....
பைத்தியம் என்றால்
ஆமா உன் மீது
என்பதும்....
கொன்னுருவே
என்றதும்
i am waiting....
இதைவிட வேறென்ன
இருக்க முடியும்...-