Latha Senthan   (Kavithaiyin kadhali✍️✍️)
143 Followers · 96 Following

Art lover
Joined 17 August 2022


Art lover
Joined 17 August 2022
4 HOURS AGO

இன்பத்திலும் இன்பமாம்
கனவிலும் அவனோடு
ஒட்டிக் கொண்டு
உறவாடுகிறது
இவளின் நெஞ்சம்....

-


4 HOURS AGO

உன் மூச்சுகாற்றும்
போதையேற்றுதே !
விலகி செல்லடா
காதல் கிறுக்கா !!

-


4 HOURS AGO

Adjustable Wife
Matured Mom (may be 🤭)
A small Entrepreneur

-


5 HOURS AGO

போன மச்சான்
திரும்ப வந்தான்
வெறுங்கூடாகி
போன பின்னாலே !

ஒத்தை ரோசா வை
எங்கு சூடிட
மண்டை ஓட்டிலும்
முடியில்லையே !

காத்திருப்பேன்
காலம் முழுவதும்
என்பதை
தவறாக புரிந்து
கொண்டானோ ?

கட்டை விழுந்த பின்
காதலிக்க ஆசையாம் ;
கூட்டுக்கிழவனுக்கு
எலும்பெல்லாம் பல்லு ,
யப்பா ! தாங்கலப்பா
இவன் லொல்லு !

இனி வளர்மதி வயசுக்கு வந்தா என்ன ?
வராட்டா என்ன ?
அட போயா அங்கிட்டு ,
இத்தனை காலம் வப்பாட்டி கூட
சல்லாபம் பண்ணிட்டு ,
மண்டைஓடு தெரிஞ்ச பின்னே
காதலாம் காதல் ....
" ம்ஹ்ம் "

-


5 HOURS AGO

இழந்த நேரங்கள்
சிதிலமடைந்தன ;
இருக்கும் நாட்களை
காத்திட வாடா !

காத்திருப்புக்கள்
பாசி படர்ந்தன ;
கண்ணீர் காய்ந்தன
ரேகைகளாக ,

பட்டு உதிர்வதற்குள்
உன் விரல் தீண்டியே
மோட்சம் தர நீ வாடா !

பாலையாய் மாறிய
என் நினைவுகளை மீண்டும்
பூத்திட வேண்டும் வாடா !

-


6 HOURS AGO

நட்சத்திர மின்னல்களை
அவள் விழிகளில்
காணும் வரை
காதல் என்றால்
என்னவென்றே
அறிந்திறாத ஜடமாய்
திரிந்தேன் ;

கண்டுகொண்டேன்
காதலை இன்றவள்
கண்களுக்குள்ளே !

சிக்கி கொள்ள ஆசைதான்
அவள் மனக்கூட்டினுள்ளே !!

-


6 HOURS AGO

விழிகளின் தேடல்
விடைபெற ஏங்குது

விரல்களின் தவிப்பு
துணைவிரல்களை நாடுது

இதழ்களின் ஆசை
முத்தங்களை கேட்குது

என்னவனே நீ வரவே
இன்பமும் அலையுதே !!

-


6 HOURS AGO

கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கிறாளாம்
காதலை ;

தள்ளி நின்று
கட்டிக் கொண்டாலும்
தொடுவது அவளெனில்
கட்டுப்பட தான்
முடியுமோ ?!

-


6 HOURS AGO

இதயக் கூட்டில் புது இலக்கணம்
எழுதிவிட்டாய் ;
இவள் காவியம் படைத்திட
இனி தடையேதடா ?

-


6 HOURS AGO

அவனை அடைகாத்து
வைத்திருக்கும்
என் இதயத்தை
அலங்கரித்தது
அவனுடைய காதல் ;
ஒவ்வொரு முறையும்
மலர்ந்து மலரச் செய்து...

-


Fetching Latha Senthan Quotes