THE END
-
வாழிய செந்தமிழ்
இனியிந்தப் பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்
க... read more
அரைக்குவளை நீர்
மற்றவர் பார்வையில்
அரைக்குவளை காலி
இரண்டிலும் உண்மை உண்டு
புரிந்து கொண்டால்
நன்மை உண்டு-
திருமாலின்
அவதாரம் தான்
இராமன்
என்று
நம்பும் உலகம்
லெட்சுமியின்
அவதாரம் தான்
சீதை
என்று
நம்புவதில்லை-
இப்போதும் கூட ஆளில்லா இரவுகளில்
அந்தப் பேருந்து நிறுத்தம் தனில் வந்து அமர்கிறேன்
கண்ணுக்குத் தெரியாத கரம் ஒன்று
காற்றின் பாதையில் நீண்டு
என் கண்ணீர் துடைக்கிறது
அப்போது எழும் உன் வாசனை திரவியம்
உன்னை உறுதி செய்கிறது-
ஒரு மழை நாளில்
உன்னோடு இணைந்து நடக்க
குடைக்குள் வரச் சொன்னாய்
நான் மறுத்தேன்.. என்பதால்
உனக்குக் கோபம்
இன்னார் வீட்டுப் பெண்
எவனோ ஒருவனோடு
குடைக்குள் ஒட்டிக் கொண்டு நடந்தாள் எனும் அவப்பெயர் உனக்கெதற்கு?
நான் நனைந்தே போகிறேன்-
மரணம்..
வரும் போது வரட்டும்..
அது வரை
செத்துச் செத்துப் பிழைப்பதழகு
எவரையேனும் நேசித்த பின்
வாழ்ந்து வாழ்ந்து
சாவதழகு ..-
நொறுங்கிய என்னை
மாற்றி விடப் பலருண்டு
நொறுங்கிய மனதைத்
தேற்றி விட எவருண்டு?-