எதிர்ப்பார்ப்பின்றி
ஏமாற்றங்களின்றி
வாழ்க்கை துவங்குவதுமில்லை
முடிவதுமில்லை
ஏற்றுக்கொள்வதிலும்
எதிர்க்கொள்வதிலும்
தான் அனைத்தும்
அடங்கியுள்ளது.-
உவகையுடன் வா(வ)சிக்க
கதைகளில் உயிரோட்டமும்
வரிகளில் ஜீவனும்
தொய்வில்லா நடையழகும்
தமிழின் பெருமையும்
தழைத்தோங்க
இரு(க்கணும்) ந்தது...-
அரும்பாகி வளர்ந்து
ஆசைக்கு வித்திடும்....
அடக்கியாள கற்றுக்கொண்டால்
அவையத்துள் முந்தியிருக்க செய்யும்.......
அடிமையாகி நின்றால்...
அவமாகி
அசிங்கப்பட்டு
அந்தராத்மா நொறுங்க நடைபிணமாக வாழ
வைத்து விடும்-
தாய்மையும்
தாய்மையின் தடம்பதித்த
திரு மணவாட்டியின்
அரவணைப்பும்...
இயல்புநிலை எய்த இனிதாய்.
வழிவகுக்கும் .-
அடக்கமும்
(ஓருமையுள் ஆமைபோல்
குறள்வழி))
தன்னம்பிக்கையும்
(முடித்து காட்டவேண்டும்
என்ற தணியாத தாகம்)
-
ஆதவனின் அருட்கரங்கள்
அனைத்துயிர்க்கும்
அபயமளிக்க....
அன்றாட சிருஷ்டைகள்
அதனதன் இச்சைகளில்
ஆழ்ந்தெழ......
அழகுற நிவேதனம்
ஆத்துமம் இளைப்பாற...💐-
மூச்சு மூட்ட வெளிவர
துடிக்கும்..
புதைக்கப்பட்ட நினைவலைகள்..
புதிராகவா ..
புனிதமாகவா....-