Kirukan   (Kirukaninkirukalhal)
334 Followers · 498 Following

read more
Joined 2 June 2022


read more
Joined 2 June 2022
20 APR AT 21:03

மீதம் வைக்காத அன்பில்
பேதமை ஏதுமில்லை
பேரன்பின் பேரின்பம்
பேதை உனக்கு
தெரியவில்லை
அன்பின் ஆழத்தை
எதுவரை என
அளந்து பார்த்தது போதும்

-


19 APR AT 20:26

எதையும் ஏற்கும்
பக்குவத்தின் மறு பாதி
ஒரு பாதி வாழ்க்கையிலே
பல பகுதி தோற்று விட
பிறந்துவிடும் நுனி போதி

-


18 APR AT 14:19

மங்கல வெளிச்சம்
தூங்கிய மயக்கத்தில்
எழும்ப தயக்கம்
அன்றைய நாளை
எழுத ஆரம்பிக்க
ஆதவன் எழுந்தால் போதும்
அவனை வரவேற்க
மஞ்சள் வானத்தில்
மங்கல வெளிச்சம்

-


18 APR AT 7:55

அறிவை புதுப்பித்துக்
கொண்டே இரு
உன் திறனை அறிந்து
உத்வேத்தால்
உயர்த்திக் கொண்டே இரு
உயர்ந்த லட்சியத்தை
அடைய அயராமல்
உழைத்துக் கொண்டே இரு

-


17 APR AT 22:20

சற்றும்
இடைவெளியின்றி
சறுக்கி விடுகிறது
தொடர்புள்ளியாக

-


16 APR AT 21:07

மட்டும்
அகப்படுமா என்ன
அகப்பைக்குள்
அளந்து பார்க்க
அறவே இல்லாமல்
இருக்கின்ற பொழுது
அறிவை கசக்க
அற்புதமான சுகந்தம்
மட்டும்
பெற்றிடுமா என்ன

-


14 APR AT 19:25

நாழிகைகள் நகர்வதில்லை
நாட்களை
எண்ணிக் கொண்டு
எதிர்பார்த்தே கிடக்கும்
சாளரத்தின் வாசலிலே
வசந்தம் கூட வருவதில்லை

-


12 APR AT 11:07

போர்வை
பசுமை பரப்பிய
சுவர் நடுவே
கிழித்து விட்டு
கிளை விரிக்கும்
தார்ச் சாலை

-


11 APR AT 20:02

புரியாத புதிர் அவள்
அறிய முற்பட
அவள் என்றும்
அறிவிற்கு அகப்படா
அழகுச் சோலை அவள்
அவளின் கலை நயத்தை
கற்றிட போதிய அறிவை
பெற்றிடவில்லை என
முனைவர் பட்டம் பெற
முற்படுகிறேன் தினம்

-


10 APR AT 12:00

உதித்த கதிர் பட்ட உடன்
மலர்ந்து விட்டு
மணம் வீசும்
மலரின் இதழ் போல
மகிந்து விட்டு
மனம் குளிர்ந்து
ஒளிவீசும் மதியாக
தினம் வாழ்கிறேன்

-


Fetching Kirukan Quotes