ஆயிரம் இருப்பினும் ...
பாலியல் தொடர்பான
விவகாரங்கள் நம்மை
மீண்டும் மீண்டும்
அச்சுறுத்தி கொண்டு தான்
இருக்கின்றன...
பச்சிளம் குழந்தை
ஆறு முதல் அறுபது வயது
முதியோர் வரையிலும்
துணிச்சல் பாதுகாப்பு என்பதெல்லாம்
வெறும் வாய்சவடால் தான்
இந்த பொல்லாத உலகில்....
-
உன்னை
போற்றி புகழும் படி
எதுவுமில்லை
எப்பொழுதும்
போலவேதான்
அதே பால்காரன்
அதே மளிகைக்கடை
அந்தந்த கடன்
பாக்கிகள்
அதே வேலை
தினமும் பார்க்கும்
அதே நபர்கள்
மற்றபடி ஒன்றும் இல்லை
புதிதாக சொல்வதற்கு...😂😂-
தான் பிடித்த
முயலுக்கு
மூன்றே கால்
என புரியாமல்
அடம்பிடிக்கும்
சில நபர்களை
என்ன செய்வது....
ஒதுங்கி
கொள்வதைவிட...-
நம் இருவரின்
மகிழ்ச்சியை
அலங்கரித்து
அழகு பார்த்து
கொள்கிறது...
அவ்வப்போது
இவள் எழுதும்
கவிதையின்
பக்கங்களில்....-
யே
நீ உலா வருகையில் ...
அவனுக்கு
உணர்த்தி விடு
அவனை மறவாது
இவள் விழி சிந்தும்
கண்ணீரை...
-
அதற்கு
பின்னணி
வாசிக்கும்
விதமாக
தூரத்து
இடி முழக்கமும்....
இணை இசையாக
தவளைகளின்
கூக்குரலும்...
வண்டுகளின்
ரீங்காரமும்...
நாயின்
ஊளையிடும்
சத்தமும்....
மின் இணைப்பு
துண்டிக்கப்பட்டதும்...
தருகிறது மனதுக்கு
ஒரு வித
அச்சுறுத்தலை....
-
மாறாதது...
பெற்றோரின்
அன்பும் பாசமும்...
நிலைத்து
நீடித்து
எந்நாளும்
எதையும்
எதிர்பாராமல்
இயங்கும் அந்த
இயற்கையை போல.....
-
பால்ய பருவ
பெண் குழந்தைகளை
பெற்றோர்களால்
நினைத்தாலும்
சிறகடிக்க வைக்க
மனமில்லை...
சுற்றி வரும் சில
பால்ய தொல்லை தரும்
ஆண் வல்லூறுகளால்....-
கருகி உதிர்ந்து
உயிர் விட
காத்திருக்கிறது...
தன்னை நேசித்த
கண்ணாளன்
அவன் மடி சாய...-