AMMU YR  
433 Followers · 105 Following

Joined 15 June 2019


Joined 15 June 2019
19 HOURS AGO

ஆகாயகங்கைக்கு
அகவை தின வாழ்த்துகள்.

-


22 MAY AT 17:55

பாட்டி சொன்ன தேவதைகள்
இன்று என் கனவுகளில்
நேசப்பூக்களின் ஆழத்தை
அளந்து காட்டுகிறது
என் உறக்கத்தில்.

-


22 MAY AT 17:50

தான்
வாழ்க்கை இனிக்கிறது
கற்பனை நினைவுகளுடன்
வண்ணங்களை அள்ளித்
தெளித்து..
வர்ணனைகளை வாரி
இறைத்து...

-


22 MAY AT 17:45

வெற்றிகள் இல்லை.
தவிப்புகள் இன்றி
நேசங்கள் இல்லை.

-


22 MAY AT 15:14

நட்புக்கரங்கள் நீண்டால்..
துக்கங்களும் வெகு தூரங்களே.

-


22 MAY AT 10:45

தலையெழுத்தை மாற்ற
கண்ணீரில் ஓர் கையெழுத்து.

-


21 MAY AT 23:12

உன் வேல்விழியால்
என் இதயத்தைக் கிழித்து...
ஊசி நூல் கொண்டு தைப்பது
உனக்கே நியாயமா...?
உன் இதயத்தை என்
இதயத்திற்கு இடம் மாற்று
அறுவை சிகிச்சையின்றி
காயம் ஆற்ற..

-


21 MAY AT 22:36

அழகான விடியல்
அள்ளித் தெளிக்கிறது
மனதின் புத்துணர்வாய்
மகிழ்வின் பொலிவாய்
இனிமையின் விடியலாய்
குதூகலங்களின் எழிலாய்
மீட்டுகிறது என்னையே..
உற்சாகத்தை உள்ளத்தில்
ஊற்றியே.

-


21 MAY AT 22:27

நான் இருக்கிறேன் என்று என்
முன்னே வந்து கை கொடுக்கிறது
என் கனவு வழி வந்த கற்பனைகள்
அழகாக கவிதை எழுதச்சொல்லியே.

-


21 MAY AT 22:23

தாய்மையை அறியாதவர்கள்.
இரக்கங்களை ஓரங்கட்டியவர்கள்.
தன் சுகங்களை தவிர வேறு
நினைவு இல்லாவர்கள்.
எவர் எப்படி போனால்
நமக்கென்ன என்ற
குறுகிய மனப்பான்மை
கொண்டவர்கள்.

-


Fetching AMMU YR Quotes