நாதியத்த அன்புதான்
எப்பொழுதும்
நாய் படாதபாடுபடும்
ஒட்டிக்கொள்ள
இதயம் தேடி-
அனாதையில்லையிவன்
மலடியென்றே
மட்டம்தட்டிய
மங்கையை...
அன்னையென
அங்கீகரிக்கப் போகும்
கடவுள்!-
உணவளித்தவளை
அம்மா என்றும்
உடையளித்தவனை
தந்தை என்றும்
மனதில் கொண்டான்
அவன் அனாதையாய்
உணரவில்லை
அவன் எதிர்பார்ப்பது
பதில் அன்பை மட்டுமே-
விழுந்தாலும் எழுந்திடும்..
அஞ்சாத நெஞ்சமுண்டு..
தடைகளை தகர்தெறிய..
தளராத தன்னம்பிக்கையுண்டு..
கனவுகளை நனவாக்க..
கனிவான வேகமுண்டு..
குறைவில்லாத உலகில்..
நிறைவான சக்தியுண்டு..
உனக்கென தனியோரு..
சகாப்தம் படைத்திட..
👍👍👍-
உடல் புதைந்து
உருவம் சிதைந்த கல்லறையில்
உயிரின்றி திரிகிறேன் நான்
அங்கே பூக்கள் புன்னகைப்பதுமில்லை
பூவிதழ்கள் மலர்வதுமில்லை
காற்றோடு ஈரமும் பாரமும் குறைவதும் இல்லை...
பலருக்கு கல்லறை பாக்கியமும் கிடைப்பதில்லை
மொத்தமாய் உடல்கள்
பெருங்குழிக்குள் மூடப்பட்டும்
உற்றார், உறவினர் எவருமின்றி புதைக்கப்பட்டும்
அனாதையாய் பலரின் உடல்
மாண்டுபோகிறது மரணத்திற்கு பின்னும்
-
ஆயிரம் நட்சத்திரங்கள்
இருந்தும்
நிலவில்லா வானம் போல
நீயின்றிய நான்....-
எத்துணை உறவுகள் இருந்தாலும்
நமக்கான ஓர் உறவு இல்லையெனில்
நாமும் அனாதைதான்-
ஈர்க்கும் தீபாவளி முறுக்கும் ❤
ஆனந்தம் கொடுத்த அதிரசமும் ❤
எச்சில் ஈர்த்த குளோப்ஜாமுனும் ❤
இனிக்கவும் இல்லை... ❤
ருசிக்கவும் இல்லை ❤
பசி தீர்க்கவும் இல்லை ❤❤
அனாதை விடுதியில்
பசியில் தூங்கிய.... ❤
சிறுவனுக்கு❤
கனவில் வந்தவை என்பதால் ❤
-
கருவறையில் வளர்ந்த கருவொன்று...👁️
இன்று தனிமையில் இங்கு வாடுவதேன்...🤷🏼♂️
இச்சையில் கூடிய மனமிரண்டு...😌
நான் இழிவென்று கருதி விரட்டியதேன்...😢
யாரோ இருவரின் தணிகணக்கு...😕
ஏனோ நானோ பலிகணக்கு...😒
ஏன் இந்த விதி எனக்கு...🤦🏻♂️
கடவுளே நியாயமா சொல் உனக்கு...☺️
நீ இருந்தால் எனக்கு பதில் அனுப்பு...🧏🏼♂️
இல்லையேல் எனக்கும் தா இறப்பு...🙅🏻♂️-