வெற்றிடம்
-
குழலினி .
(குழலி)
535 Followers · 13 Following
Joined 1 May 2021
22 OCT 2023 AT 18:43
அவன் முத்தமிடாத
அவளின் கன்னங்களில்
பருக்களும் தஞ்சம் புகுந்தன
அவைகளும் இனி
தவமிருக்கட்டும்
-
21 OCT 2023 AT 8:27
உறவின் தொடக்கத்தில்
அனைவரும் அதிக அன்பையும்
அதிக அக்கறையும் காட்டுவார்கள்
ஆனால் போகப் போக அவர்கள் யார் என்பதை காட்டி விடுவார்கள்
அவர்களின் மோசமான குணம்
திரும்பத் திரும்ப காயப்படுத்தும் பொழுது
நல்லவர்களாக இருப்பதை எங்கே எப்படி நிறுத்த வேண்டும் என்பது தெரியவில்லை
உணர்வை புரிந்து கொள்ளாமல் உறவை காப்பாற்றி என்ன பயன்-
12 MAR 2023 AT 13:35
சண்டையிடுவதெல்லாம்
என்னவோ கொடுத்த
முத்தங்களை எல்லாம்
திருப்பி
கேட்க தான்
-
8 MAR 2023 AT 7:31
மகளிர் தினம்
வாழ்த்துக்களுக்கு
பஞ்சமில்லை
ஸ்டேட்டஸ்களுக்கும்
பஞ்சமில்லை
ஒரு நாள் மட்டும்
கொண்டாடிவிட்டு ஓரத்தில்
போடப்படும் மகளிர் தின கொண்டாட்டம்-