....
-
அந்திசாயும் பொழுதிலே...🌖
செம்மேனி உந்தன் வருகையே...😍
தென்றல் காற்றும் வீசவே...🍂
உன் மேகச்சேலை விலகுதே...😉
உன் அங்கம் முழுதும் நான் ரசிக்க...🥰
வெட்கத்தில் இன்னும் நீ சிவக்க...🙈
போதும் போதும் இந்த மயக்கம்...💞
உன்னால் கூடுதே...🖤
என் கவிதையில் இனப்பெருக்கம்...✍🏾-
தாய் இழந்த சிறுவன் அவன்...💔
பசி மயக்கத்தில் வீதி கடந்தான்...🚶🏼
பேனா கறை படிந்த மேற்சட்டை ...🥼
கிழிந்து தையலிட்ட காற்சட்டை....👖
பொத்தான்களாய் நிரப்பப்பட்ட பின் ஊசிகள்...🧷
என அழகாய் வீடு திரும்பியவன்...😍
தன் புத்தகப்பையை ஓரம் வீசினான்...🎒
பாட்டி என்று அழைத்தான்...🗣
அவள் கைகளில் மிளிர்ந்தது...🌟
அந்த ஒற்றை ரூபாய் நாணயம்...💰
அலைகடலென திரண்டது அவன் சிரிப்பு... 🌊
ஏனோ நாணயத்தை பறித்து ஓடினான்....🏃
அந்த ஒரு கிலோ அரிசி வாங்கிட...🍚
இமை அசையா அந்த ஒற்றை நொடி...👁
குடிபெயர்ந்தது என் கண்களில் கண்ணீர்...😭
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்....😁
ஏனோ கண்டு கொண்டேன் இன்று...💕-
வெட்கத்தில் முகம் மூடிய தேவதையே...😉
என்னோடு நட்பில் பூத்த தாரகையே...💑
பேரலையின் பின் அமைதியோ நீ...🤫
பேரன்பின் முன் நிற்கும் பிம்பமோ நீ...😘
கோபமே ரசிக்கும் உன் பொறுமையும்...🤔
கொஞ்சும் அழகாய் உன் புன்னகையும்...🤩
அன்புச்சாரல் தூறும் உன் மனமும்...😻
ஆறுதல் குடை பிடிக்கும் உன் குணமும்...🤗
உன் பாசமும் என் கிண்டலும் பேசுமே...😅
பொய்மையற்ற நட்பாய் நாளும் நீளுமே...💪🏻
பருவங்கள் மாறி காலம் சென்றாலும்...🚶🏿♂
நம் நட்பின் ஆழம் குறையாதடி...☺
தோழ(மை) தொட்டு எழுதுவேன்...✍🏼
யுகம் முழுதும் உயிர்தோழி நீயடி...💓-