எங்கேயோ வெட்டும்
மின்னலின் ஒளியில்
ஜொலிக்கும் குடிசை போல
எங்கிருந்தோ பார்க்கும்
என்னவளின் பார்வையில்
நானும் அழகனானேன்
என்னவள் என் அழகின்
மின்னல் ஒளி இவள்-
Why not for you
Contact this number to bless
or curse 8825586670
15... read more
எங்கேயோ வெட்டும்
மின்னலின் ஒளியில்
ஜொலிக்கும் குடிசை போல
எங்கிருந்தோ பார்க்கும்
என்னவளின் பார்வையில்
நானும் அழகனானேன்
என்னவள் என் அழகின்
மின்னல் ஒளி இவள்-
சோலையில் உலாவி
என் சோர்வு நீக்க விழைகயில்
மென் மலர் சோலை எந்தன்
வன் விரல் பிடித்து உடன்
பயணிக்க வியந்தேன்.
என்னவள் என்
மலர் சோலை இவள்.-
விழி நீரை மறைத்து
ஆறுதல் சொல்ல
எத்தனிக்கிறேன்
என் முதுகில் தன்
விரல்களின் தீண்டலில்
மெல்ல சொல்கிறாள்
ஒன்னும் இல்லை
பயப்படாதே என்று
என்னவள் என் மனதின்
வலிநிவாரணி அவள்-
வெற்று பலகையாய் வெறுமையில்
நான் வெளியே பார்த்திருக்கேன்
வண்ண எழுதுகோலாய்
வஞ்சியவள் வருகிறாள்
எஞ்சிய என் காலத்தை
வானவில் ஓவியமாக்கிட
என்னவள் காதல் தூரிகை அவள் .-
சட்டென திரைக்கிழித்து
சலன மனம் கொண்டே
என்னவள் மேல் பாய்கிறாள்
கதா நாயகி அவள்
அழகின் பொறாமையில்
என்னவள் பாலின பேதமில்லா
பேரழகி அவள்.-
காதல் கொடி இவள்
பூத்து தேன் சுமந்து
காய்த்து கனி சுமந்து
காளை இவன் தோள் படற
காத்திருக்கிறாள்
காலம் கனியுமென்றே-
I don't need that book
Her eyes are reflecting the
Words beautiful poem-
கள்ளப்பார்வையில்
களவாடிப்போகிறாள்
காளை இவன் இதயத்தை
என்னவள் காதல் களவாணி இவள்-
ஆனந்த குளியலுக்கு அச்சாரம்
என்னவள் தரும் இச்சாரம்.
தனிமையின் அழுக்கு போக்க
ஆனந்தமாய் அவளை உரசுகிறேன்.
இதழை சுத்தம் செய்ய அவள்
இதழை சுவைக்கிறேன்.
அகத்தின் நாற்றம் களைய
அவள் அணைப்பில் தேகம் மணக்கிறேன்.
காதல் மாளிகைக்கு வேண்டாம்
தூண்கள் நான்காக
பிண்ணி பிணைந்து உறுதியாய்
கால்கள் எனும் தூண்கள் இரண்டாக.
ஊடலில் நடுங்கிய மனம்
கூடலில் குலுங்கிடும் புறம்.
காதல் குடமுழுக்கில்
கலசங்கள் தான் நனைய.
நிகழ்வின் உச்சமாய் தேகமெங்கும்
தெறித்து வழிகிறது புனிதநீர்.
-