என் நிஜம் ஒன்றுதான்..!
நிழல்கள் ஒவ்வொன்றும்
மாறி கிடக்கிறது
மற்றொர் பார்வைகளில்..!
என் பாதையில்
என் பயணம் எப்போதும்
நேராக செல்லும்..!-
அடிமையாய் வாழ பேராசையடி💕
என் காதல் ராட்சஷி..💞
கண் கொட்டாமல்
காத்துகொண்டிருக்கிறேன்
நீ என் வாசல் வரும்
என் வசந்தம் காணும்
பேராவலோடு..!-
நிலவின் ஊர்வலம்
நித்திரை தொலைத்து
யுத்தம் செய்யும்
நின் முத்தத்தில்தானடி
என் காதல் ராட்சசி..!-
கதைகள் பேசவா
காத்திருக்கிறேன்..!
இல்லையடி 🤔
நின் மைவிழி
பார்வையில்
நான் மதிமயங்கி
போய்விடும்
காதலுக்காய் 🥰
காத்திருக்கிறேனடி
என் காதல் ராட்சசி..!-
ஒருவர் மீது
வெறுப்பை உமிழ்வது
தன் கோவத்தை
குறைக்குமானால்
நாம் முதலில் வெறுப்பது
நம் உயிரான உறவைதான்..!-
என்ன சமைக்கலாம்
என்பதில் துவங்கி
உன்னை சுவைப்பதே
Sunday சமையல்
ஸ்பெஷல்..!-
தீண்டும் பார்வையில்
திகட்டாத காதல்
திரண்டெழும் கவிகளில்
தின்று தீர்க்கிறது..!-
புலர்ந்த தளிர்
சருகாகும் நொடி வரை
மரத்திற்கு உயிரூட்டும்..!
உதிர்ந்த பிறகும்
பல உயிர்களுக்கு
உரமாகும்..!
சருகுகூட சரித்திரம் பேசும்
சாதனைத்தான் இயற்க்கையோ..!-