ஆராரோ பாடினாலும்
அன்னம் ஊட்டினாலும்
அவைகளுக்கும்
சேர்த்து செய் என்பான்
பெற்றெடுத்தேன் இவனை
இவனால் தத்தெடுத்தேன்
அவனின் பொம்மைகளை
சீண்டவும் மாட்டான் சிலசமயம்
ஆனாலும்
சிதறியே கதறும்
அப்பொழுதும்...
விஜயும் ஜோ வும் மறந்து
காகமும் பூனையும் தேடவைத்தான்
கார்ட்டூன் பாடல்களின்
காதலியானேன் நானே
முப்பொழுதும் அதையே
முனங்குகிறேனே..,
மழலை மொழியும்
மானின் கால்களும்
ஆந்தை விழிகளும்தான்
அன்னையானதற்கு
அவனளித்த பரிசு..,!
பெண்மைக்குள் தாய்மை பிறவி குணமென்றால்
அன்னைக்குள் மழலை அவன்தந்த வரமெனக்கு!-
அன்பு அன்பு
என்று பினாத்துபவர்களே
அன்புமட்டும் எப்படி
ஒரு மனிதனின் குணம் என்றாகும்..!
மனிதன் உணர்வுகளின்
குவியல்
ஒருவனுக்குண்டான
அத்துனை உணர்வுகளோடும்
அவனைநேசிக்கப் பழகுங்கள்...
தலைக்கணம் தயக்கம் ஆசை
கோவம் பயம்மென ...
ஏதவதுஒன்றில் கூடிப்போவது
கூட வளர்ந்த சமூகத்தாலே...
தவறென்றதை எண்ணாமல்
அது அவனின் தனித்துவமாய்
எண்ணிப்பழகு..!
தனித்துவத்தோடு
அடையாளப்படுத்தவே
முகம் மட்டுமல்லாமல்
அகத்தையும்
வெவ்வேறாய் படைத்தான்
இறைவன்...!-
காலங்கள்
கடந்தபின்னும்..
கை கால்கள்
தளர்ந்தபின்னும்
உறவுகள்
உதறியபின்னும்
உன்னோடு
நானிருப்பேன்!
ஊன்றுகோலாகி
உன்கைப் பிடியில்
உன்பாதையிலென்றும்
உன்னோடெப்போதும்!
-
திட்டித்தீர்க்கும் தாத்தா!
பாசத்தைக் கொட்டிகுவிக்கும் பாட்டி!
சில்லுவண்டென சிரித்திடும் சிறுபிள்ளைகள்...
திரும்பும் திசையெல்லாம் திகட்டா சண்டைகள்...
பழையசோறுக்கும் பறக்கும் பங்குசண்டைகள்...
ஆளுக்கொரு முனைப்பிலிருந்தாலும் அடைகாக்கத் தவறா அணைப்புகள்...
மணிக்கொரு மல்யுத்தம்...
தினமொரு தீபாவளி!
📝ஜீவி தமிழ்😍...
-
அடுப்படியும் அடுத்தவர் நலன்காப்பும்தான்
ஆயுளுக்கும் அவளின் சபிக்கப்பட்டவரமென்று
ஆழ்மனதிலறிந்தாலும்...
அவளவனின் அழகானபொய்கள்தான்
அவள் அறிந்தே சறுக்கும் அறியாமை...
காதலின் அறிமுகத்தில்
காத்திருத்தலில் தொடங்கி...காவலாவதும்...
கணக்கற்றப் பொய்யில்
காற்றில் மிதக்கச்செய்வதும்...
தாங்குவதும் ஏங்குவதும்
கொஞ்சுவது கெஞ்சுவதுமெல்லாம்
கொஞ்சநாளைக்குத்தானாயினும்
எஞ்சியநாட்களெல்லாம் அதையெண்ணியவண்ணமே பயணிக்கப்போகும் அவளுக்கு
அவையே ஆகச்சிறந்த ஆனந்தம்...!-
புதியதோர் கிரகம்..!
வாசிப்புலகத்தில் வசித்துப்பார் கொஞ்சம்...
வசித்திடுமிவ்வுலகையே அது மிஞ்சும்...
வசீகரமதில் எல்லை விஞ்சும்...
வசப்பட்டால் மீளாமல் கொள்வாயதில் தஞ்சம்...
வசந்தஉலகதற்குள் வலிந்திழுக்கும் யாவரையும் உன்நெஞ்சம்..
வீரியம்குறையா இன்பம் வழங்குவதிலில்லையொரு கஞ்சம்..!
புத்தகமெனும் புத்துலகை
புசிக்கும் பசியை
புகுத்திடு யாவர்க்கும்...
புதுயின்பமதில் திளைக்கட்டும் இவ்வுலகம்..!-
திருமணச் சந்தையில்
வீடேறிவந்து
விலைபேசிச்செல்கையில்
விலையின்றித்தான் போகிறது
பெண்ணின் விருப்பங்களனைத்தும்!!!-