உச்சரித்த அந்த நொடியில்.....👇👇👇👇👇
-
சில விஷயங்கள் பண்ணும் போது
நமக்கு பயமே இருக்காது
ஆனால் கூட இருக்குற நாலுபேர்
குடுக்குற பில்டப்லயே
முக்கால்வாசி பயம் மூச்சு போற
அளவுக்கு வந்துடும்.
-
மங்கையவள்....
பூப்பெய்த முதல் நாள் ....
புத்தாடை போர்த்தி ....
பூக்களால் அலங்கரித்து ...
உறவுகளை கூட்டி.....
விருந்திட்டு கொண்டாடும் உற்சவம் ...
அடுத்த 3 நாட்களோ தீண்டாமை
கலாசார திண்ணையோர படுக்கை
குருதி வாசனையோ உடலெல்லாம்
பரவி குமட்டலை ஏற்படுத்துகிறது
அதனால் என்னவோ
எங்கையும் போக எண்ணியதில்லை ..
யாரிடமும் அருகில் அமர மனம் எண்ணுவதில்லை .....
அவள் உடலை கொண்டு
அவளே கோபம் கொள்கிறாள் ....
வயிற்று வலியால் துடி துடித்து
வாழ்க்கையையே வெறுத்து போகிறாள் ...
கோவிலை கண்டும்
குர்-ஆன் கண்டும் வேதனையோடு
விலகி நிற்கிறாள் .....
பெண்ணை கேலி கிண்டல் செய்து ....
இவள் வெறும் பெண் தானே என
கூறும் சமூகமே .....
நீ உன் வாழ்நாளில் அனுபவிக்கும் வலியை விட
மதந்தேறும் அதிகமாகவே அனுபவிக்கிறாள் ....
சிந்தித்துபோம் ......
பெண்ணியம் காப்போம் ...!!!!!
-
உன்னை கடந்து சென்ற
அந்த நம்முடைய பயணத்தில்
அந்த சில நொடி பொழுதிலும்
உன் கடல் மீன் போல
துள்ளி திரிந்த பார்வையால்
அலைபோல நிலை கொள்ளாது!
என் மனம்..... நிலை கொள்ளாது!
-
கைகள் என்னும் சிம்மாசனத்தில் இருந்த கைப்பேசி தரையின் மீதுள்ள தன் காதலை முத்தம்மூலம் வெளிப்படுத்த முற்படுகையில்..அந்த நொடி.. நம்மில் பலரின் முகமும் மனமும் பூகம்பத்தை எதிர்க்கொள்ளும்..
-
இரக்கம்
இன்பம்
தவிப்பு
தவிர்ப்பு
தனிமை
கோபம்
இயலாமை
ஏமாற்றம்
அனைத்தையும் கடந்து
விடுகிறேன்..
அந்த ஒரு பாடலில்-