குழந்தை பிறப்பிற்கு மட்டும் தான் இன்னும் பதாகைகள் வைக்கும் வழக்கம் வரவில்லை..
-
பேருந்தில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு மழலை,
கண்ணாடியை பார்த்து தன்னைத்தானே திட்டிக் கொண்டு பின்பு தன்னைத்தானே கொஞ்சிவிட்டு, தன் பல்வரிசை பார்த்து முத்தமிட்டு ஆட்டம் போட்டு
என் தூக்கத்தை தொலைக்க வைத்தாள்.
கண்கள் மூடுமோ.. அவளை ரசிக்கும்போது..-
இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு வருத்தமா?
இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு சந்தோஷமா?
இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு கோபமா?
இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு சண்டையா? என்று
என்னை நானே கேட்கிறேன்...
சின்ன சின்ன விஷயங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று எனக்கு நானே சொல்கிறேன்.-
யாருமில்லா தனியறையில் தொலைந்து போனேன் நானும், என் எண்ணங்களின் நெரிசலில்...
-
வெளியே ஆரவாரம், உள்ளே அமைதி...
வெளியே அமைதி, உள்ளே ஆரவாரம்...
இப்படியே மாறி மாறி நகர்கிறது நாட்கள்.-