கண்மூடி நான் கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாக்கோலம் இன்று
காதலின் விளிம்பில் நான் கண்ட கவிதையே...!!!
தணிகையின் தனிமையை போக்க
துணைவியாய் வந்த நறுமுகையே ..!!!
உன் கரம் பற்றிக்கொண்டு
ஊரறிய மாலையிட்டு
உன் மடிமீது துயில்கொண்டு
மார்போடு தலைசாய்த்து
உனக்குள் நான்
எனக்குள் நீ என உறைந்திட தான்
நமக்குள் இந்நாள் வந்ததோ ..!!!
காணும் மங்கை எல்லாம் எந்தன் காதலி உன் முகமே..!!
கண் இமைக்கும் நொடியில்
தாயாய் மாறிய என் தவமே...!!!
இதழோர சிரிப்பில் என்னை
மயக்கும் மாயக்காரியே...!!!
இப்பிறவி கொண்டாலும் நீயே வேண்டும்...
மனைவியாக மட்டும் இல்லை
என் மகளாகவும் ....!!!!-
அப்பா செல்லம்😋
தந்தை 😎தாய் 😍தமிழ்😎தல😘
எண்ணம் 👑போல் வாழ்க்க... read more
உடைந்த என் இதயத்திற்க்கு உற்சாகமளிப்பது ...
உனக்காக நான் எழுதும்
கவிதைகள் மட்டுமே...!!!-
நிசப்தமாய் சொல்கிறது வாழ்க்கை,
இதுவும் கடந்து போகும் ஆனால்
எதுவும் மறந்து போகாது என்று ...!!!!-
கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
கண்ணாளனே...!!!
கடந்தோடிய நம் காதல் பயணம்
ஒருமுறை கரையேறுமா என்று ...!!!-
இது விதியா விளையாட்டா என்று தெரியவில்லை...
விரும்பியதால் என்னவோ விலகவும் மனம் இல்லை....
கை சேருமோ, கரை சேருமோ...இல்லை கண்ணீர் மட்டும் வாழ்வாகுமோ...!!!-
என் இதயத்தின் அழுகுரல் யார்
செவிகளிலும் இசையப்போவதில்லை
தினமும் கொள்ளும் உன் நினைவுகளுக்கு மத்தியில்
உயிரில்லா பொருள் போல் ஓய்ந்து கிடக்கின்றேன் ...!!!
ஒருநாள் நீ என்னை தேடி வருவாய் என்று
இழந்ததை எல்லாம் உன்னிடம் பெற
நினைத்த எனக்கு
நான் இறந்தால் தான் உனக்கு மகிழ்ச்சி என்று
சொன்ன கணமே மாய்ந்துவிட்டது என் உயிர் ...!!!
கலங்காதே என எனக்குள் கட்டளையிட்டு கொண்டாலும்
கரைபுரண்டு ஓடுகிறது கண்ணீர்
என் மனம் புரிந்தும் புரியாததுபோல் நீ
புரிய வைக்க முடியாமல் நான்...!!!!-
உயிரணுவில் பிறக்காத உன்னத உறவு இவன் ...!!
உயிர் போகும் நாள் வரை உடனே வரும் உணர்வு இவன் ...!!
உள்ளத்தில் கபடம் இல்ல கள்வன் இவன்...!!
துன்பமாய் நான் இருந்தால் அதை
தூரமாய் மாற்றிடுவான் ....!!
இன்பத்தில் திளைத்திருந்தால்
எல்லாமும் அவன் செய்திடுவான்
தொப்புள்க்கொடி உறவாடவில்லை ...!!
தோள்மீது சாய்ந்து விளையாடியதும் இல்லை...!!!
அன்பை பரிமாறியதும் இல்லை ..
ஆசையாய் பேசியதும் இல்லை...
இருப்பினும் இவன் என் அண்ணன்
என்பதில் என்றுமே மாற்றம் இல்லை...!!!!!!!
-
மாநிறம் கொண்ட மாங்கனி அவள்
மாறாத மணம் கொண்ட மலர்செண்டு அவள்
தேன் சிந்தும் பேச்சிலே மயக்கிடுவாள்
தெனாவெட்டாய் அவ்வப்போது நடந்திடுவாள் ....
அன்பிலோ அன்னைக்கு இணையானவள்
அழகிலோ ஆர்ப்பரிக்கும் தேவதை அவள்
என்னவளே
என்றுமே நீ எனக்கானவளே ...!!!
-
உன் நினைவுகள் தீண்டும் தருணங்களில் நிசப்தமாய் நனைகிறது தலையணை...!!!
-
எதையும் தாங்கும் என் இதயம்
என்னவனே உன் பிரிவினை மட்டும்
ஏற்க மறுப்பது ஏன் ...??-