இப்பிரபஞ்சத்தின்
ஏதோ ஒரு மூலையில்
உன் நினைவுகள் ஒட்டியபடியே...
விலகாது விலகி வாழ்கிறேன்....
உன்னிடமிருந்து...
-
இங்கு எல்லாம் மாறிவிட்டது
எல்லோரும் மாறிவிட்டார்கள்..
நீயும்..!!!
ஆனால் நான் மட்டும் இன்னும்
அதே இடத்தில் தான் நின்றுக்கொண்டிருக்கிறேன்..!!!-
என்னைச் சுற்றிய
உன் வாசனைகளும்..!
உன் நினைவுகளுமாய்..!
என்னோடான
உன் இருப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றது.-
உனக்கென சேகரித்த வார்த்தைகள்
எல்லாம்
அள்ளி எடுக்கையில்
அது ரணங்களின் மலர் செண்டை போல..
அத்தனை துயரமாகவும்
அத்தனை நேசத்தோடும்
அத்தனை வலியாகவும்
இன்னும்
என் கையில் அப்படியே இருக்கின்றது.-
உன் நினைவுகள் மறைவதில்லை...
அமைதியை விளங்கிய இருட்டில்
உன் நிழலின் வர்ணத்தை
தேடி அலையும் மனதின்
கண்ணீரில்
விழி நனைந்து செல்கிறது...!!!
-
உன் நினைவுகள் மறைவதில்லை...
அமைதியை விளங்கிய இருட்டில்
உன் நிழலின் வண்ணத்தை
தேடி அலையும் மனதின்
கண்ணீரின் கரையில்
விழி நனைந்து செல்கிறது...!!!-
உன்னை சுமந்து கொண்டிருக்கும்
என் இதயத்தில்
உடைந்த கண்ணாடி போல்..! நீ
என்னை
காயப்படுத்தும்போது
அதன்
உள்ளுக்குள் இருக்கும் உனக்கு
கொஞ்சமும் வலிக்கவில்லை என்பது
ஆச்சரியம் தான்...!— % &-
உன் பேரன்பின் பிரிவிற்கு பின்னால்
உன்னிடம் சொல்ல வந்த
வார்த்தைகளை வைத்துக் கொண்டு
என்ன செய்வது...
அதனால்
சொற்களை கவிதையாக்கி விட்டேன்
உன்னைத் தவிர
எழுத எனக்கு ஒன்றுமே இல்லையே..!
என்ன செய்ய..!!!— % &-