யாதுமாய் உன்னை
நெருங்குகையில் எல்லாம்
யாரோவாய் விலகி நிற்கிறாய்
கையேந்தி நிற்கும் நிலையில்
தள்ளப்பட்ட அன்புக்குள்
பிச்சையிட்டு கூட சென்று விடு
ஆனால் அலட்சிய பார்வையில்
என்னை ஒருபோதும்
ஏளனம் செய்யாதே
மரணம் காட்டிலும்
பெருந்துயரொன்று
மனமேறி அமர்ந்து கொள்கிறது....-
நடுவில் என்றும்
புன்னகையை உதிர்க்க
மட்டுமே வரமாய்
வாங்கி வந்தவள் இவள்.... read more
ஏதோவொன்றில்
இருத்திகொள்ளத்தான்
இத்துணை போராட்டமும்
கனவு கற்பனை
கவிதை பிடித்தது
எதுவாகினும்...
ஆனால், நிஜங்கள்
உணர்ந்ததும் சாயல்கள்
காணாமற் போய்
கவலையாடையை
அணிந்து கொள்கிறது
மனம் நடைமுறையில்.....-
ஆச்சர்யத்தின் குறியீடு தான்
ஆசைகளை பலவிதத்தில்
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
ஆள நினைக்கிறது என்னிடத்தில்
ஆழமாய் உறங்கி கிடந்த நேசங்கள்
ஆவலை சந்திக்க தயாராகி நிற்கிறது
ஆதரிப்பாயோ அலைகழிப்பாயோ
ஆமோதிக்க தயாராகிறது எதையும்
ஆராயும் இம்மனம்
ஆனாலும் நீயற்ற வாழ்வெனக்கு
ஆதரவில்லா நிலையென்பதே நிஜம்.....
-
எதிர்பார்ப்பின் மகிழ்ச்சியில்
ஏமாற்றங்களை
சந்தித்த போதிலும் கூட
மரணத்தை எவ்வகையிலும்
தேர்ந்தெடுத்திட கூடாதென்ற
எண்ணங்களை விதைத்தவனால்
மீண்டுமொரு முறை
இவ்வுலகில் நான்
-
உன் வார்த்தையில் தான்
இவள் இருப்பின் ஆதாரம்...
சமயத்தில் சாடிடுவாய்
பலநேரங்களில் கொஞ்சிடுவாய்...
இப்போதெல்லாம் முகம்
நோக்கினால் இருவருக்குள்ளும்
வெட்கம் கலந்த நேசம்
இழையோடி கொண்டிருக்கிறது...
முன்னமே தெரிந்திருந்தால்
சில பிரிவுகளும் தவிர்த்து
போயிருக்குமோ...
இப்போது மட்டுமென்ன,
உனக்கு கோபம் வந்தால்
இனி இவள் விழிகளுக்குள்
வசிக்க செய்திடுகிறேன்
சரிதானே.....-
தொடரும் பந்தங்களுக்கு
புதிதாய் பெயரிட
வேண்டாம்...
அவர்கள் எல்லாருமே
சுயநலத்தை மட்டுமே
விரும்புவர்கள்
அவ்வளவு தான்...-
சில பிரிவுகளுக்கு பிறகு
மௌனித்து விட்டேன்
எதுவும் வேண்டாமென்பதாய்...
வெறுத்து விட்டு
கொஞ்சம் போல்
விலகியும் விட்டேன்...
போனால் போகிறதென்று
மன்னித்தும் விட்டேன்
அதீத அன்பில்...
ஆனால் இப்போதும் கூட
வார்த்தைக்கும் சொல்ல
தோன்றவில்லை என்னால்
உன்னை மறந்து விட்டதாய்......-
இந்த yq தளத்தில் தன் எல்லா
உணர்வுகளையும் கவிதையில்
படைத்து பிறரையும் ரசனைக்கு
உள்ளாக்கும் கவிஞர் இவர்...
இவரின் கண்ணம்மா கவிதையில்
மட்டுமல்ல இவரின் ஒவ்வொரு
எழுத்திலும் உயிர் பெற்றிருப்பார்...
கர்ணன் போல் மனம்
மன்னன் போல் கொடைகுணம்
மொத்தத்தில் அன்பின் மனிதர்...
பாடலாசிரியராகவும் புதிதாய்
பொறுப்பேற்றிருக்கும் கவிதையின்
நாயகனுக்கு வாழ்த்துக்கள்💐
என்றும் இவரின் ரசிகை என்பதில்
பெருமிதம் எனக்குண்டு...
என்றென்றும் இக்கவிதை தளத்தில்
சிறப்புற இவள் சிரம் தாழ்த்தி
கொள்கிறேன் சார் 🙏🏻...
-
பழகிய கொஞ்ச நாட்களில்
மனதை ஆக்கிரமிப்பு செய்து
கொண்டவர்...
கொஞ்சம் கொஞ்சமாய்
பேசிய போதிலும் நிறைவாய்
நின்றவர்...
வரிகளில் வசியமும்
வார்த்தையில் பிரமிப்பும்
காண செய்தவர்...
இடைவிடாது இத்தளத்தில்
பயணித்து மேலும் பல கவிதைகளை
படைக்க இவளின் வாழ்த்துக்கள் 💐💐-