வார்த்தைகள் விளையாட்டில்
வித்தகியும் அவளே!
விந்தையும் அவளே!
வியப்பும் அவளே!
விடை அறியா கேள்வியும் அவளே!
விண்ணும் அவளே!
விண்ணில் வண்ணமான வானவிலும் அவளே!
விண்மீன்களும் அவளே!
என் தமிழ்!!!-
அன்பின் நேசனாக மாற்றியதே!
என் தமிழ்....😍😍😍❤️❤️❤️😍😍😍
கிறுக்கல்களின்
100 வது பதிவு
ஏனோ....
காதல்......
உன் மீது.......
👇🏻👇🏻👇🏻
-
உன்னை சிறைபிடிக்க
வந்த என்னை
சிரிப்பால் சிறைபிடித்து
உன் அன்பினால்
பேரின்ப சிணுங்கலில்
சித்திரவதை
செய்யடி!
இலயாழினி!-
நான் என் வழியை மறந்துவிட்டேன்!
என் தமிழே!
என் வாழ்வே நீ
என ஆன பின்பு
உன் அன்பின் அதிர்விலே!
அடியெடுத்து நடை பழகிய எனக்கு!
நான் வந்த வழியே மறந்தே போனேன்!-
யாருக்கும் அஞ்சோம்
எதற்கும் அஞ்சோம்.
எங்கும் அஞ்சோம்
எப்பொழுதும் அஞ்சோம்!-
மெய் உருக!
மேனி உருக!
மோக
பனி உருக!
உருகும்
மெழுகுருக!
ஊன் உருக!
உயிர் உருக!
கண் உருக!
மண் உருக!
மாசற்ற
மகாராணியே!
உன் மனம் மட்டும்
உருக மறுப்பது ஏனோ!-
விடை கொடுத்து
விலகிச் செல்ல! நீ
வசந்தகால மழை அல்ல
அள்ள அள்ள குறையாத
அமுதசுரபியான
அருட் பெரும் கவி ஊற்று!
அகரம் தொடங்கி
சிகரம் தொட்ட
செந்தமிழே! என் பைந்தமிழே!-
மறைத்து வைத்த காதல் அது
பூத்து குலுங்குது
பூவாகி காயாகி கனிந்த காதல்
இலை மறைவாய்
கனியமுதே! உன் கை சேருமோ!
கனிந்த காதல்
யாருக்கும் பயனின்றி
நாட்குறிப்பில்
வெரும் வரிகளாகவே
படுத்தே உறங்குமோ!
-
அழகிய
அந்த
நாளில்
அழகியே!
ஆளைக்
கொல்லும்
பார்வையால்!
பரிதவிக்கிறது
பரிதாபமாக
பாவி நெஞ்சு!-