உன் சிறு புன்னகையில்
என்ன தேடுகிறேன் என அடிக்கடி தோன்றும்...
தேடியது கிடைக்கவே கூடாதென கடவுளிடம் வேட்டிக்கொண்டே....
போதும் அம்முறுவல்
வாழ்க்கை முழுவதும்
தூரத்திலிருந்தாவது தீர்த்துக் கொள்ளகிறேன் என் ஏக்கத்தை..,!
-
உயிரை உருக்க முடியும் உன்னால்...
ஆனால் பார் உன் சன்னல் கதவுகள் எனக்கு மட்டும் எப்பொழுதும் மூடியே இருக்கிறது...-
இரக்கம்
இன்பம்
தவிப்பு
தவிர்ப்பு
தனிமை
கோபம்
இயலாமை
ஏமாற்றம்
அனைத்தையும் கடந்து
விடுகிறேன்..
அந்த ஒரு பாடலில்-
துரத்திச் செல்லும் மேகங்களுக்கு தெரியவில்லை....
என்னவன் என்னில் தொலைந்துவிட்டானென...-
பரிச்சயமான இடத்தில்
பாரபட்சமில்லாமல் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
உன்னிடத்தில்..-
தொடக்கமும் முடிவும் நீயாய் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்...
இடையில் இந்த நிலையில்லாத உறவுகளில் சிக்கியிருக்க கட்டாயமிருந்திருக்காது...
அமைதியாய், ஆத்மார்த்தமான,
துயில் கொண்டிருப்பேன்
உன் கருவறையில்...
அம்மா.....!!!
-
மெதுவாக
கொஞ்சம் அழுத்தமாக
ஆசையாய் ஆத்மார்த்தமான
துளி வஞ்சமாய்
வேகமாய் பெரும் சத்தத்துடன்
வன்மையாய் வாரிச்சுருட்டி பெரும் முழக்கத்துடன் முத்தமிட்டது
கோடைமழை தன் காதலி பூமியின் மேல்.....
நீண்ட நாள் தவிப்பை
தணித்துக் கொண்டே...
இன்னமும் பொழிகிறது .-
சிலரின் கதைகளில்
அவர்கள் கதாநாயக(கி)ன்
மட்டுமல்ல
வில்ல(லி)னும்....
பல நேரங்களில் அவர்களே அவர்களை சிரிக்க வைக்கும்
கேளிக்கை பாத்திரமும் கூட...-
விட்டில் பூச்சிகள் வெளிச்சம்
தேடுமாம் இரவினில்..
அதைப்போல
அனிபவிக்கும் வாழ்க்கை பாடத்தில் மகிழ்ச்சி தேடுவதுதான்
விரக்தியின் எல்லை-
துயில்கிறேன்,
விழிக்கிறேன்,
பேசுகிறேன்,
சிரிக்கிறேன்,
பயப்படுகிறேன்,
ஏமாறுகிறேன்,
வலி ஏற்கிறேன்,
சிதைகிறேன்,
சிந்திக்கிறேன்,
என்னை நானே தேற்றுகிறேன்
எப்போதும் போல...-